தமிழக CGM திரு. தமிழ்மணி - AIBDPA மாநிலச் சங்க தலைவர்கள் சந்திப்பு
September 26, 2023
தமிழக CGM திரு. தமிழ்மணி - AIBDPA மாநிலச் சங்க தலைவர்கள் சந்திப்பு
தோழர்களே, புதியதாக பொறுப்பேற்று இருக்கும் CGM திரு. தமிழ்மணி அவர்களை இன்று 26.9.23, மாநில சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தம் சந்தித்து, சங்கத்தின் சார்பில் அவருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தோம்.
மாநில தலைவர் தோழர் சி கே நரசிம்மன், மாநிலச் செயலாளர் ஆர் ராஜசேகர், சென்னை மாவட்ட செயலாளர் தோழர். கோதண்டம், மாவட்ட துணைச் செயலாளர் தோழர். சுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.
CGM அவர்களுடன் அண்மையில் நடந்து முடிந்த மெடிக்கல் அதாலத் குறித்தும் அதில் ஒப்புக்கொண்ட பிரச்சனைகள் விரைவாக தீர்க்கப்படுவதற்கு நடவடிக்கைகள் வேண்டும் என்பதையும், மாவட்டம் தோறும் Nodel அதிகாரிகள் போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், cataract அறுவை சிகிச்சை பில்கள் process செய்ய மேலும் பல விளக்கங்கள் தேவைப்படுகிறது என்றும் அவரிடம் விளக்கி இருக்கிறோம்.
முதல் கூட்டம் என்பதனால் ஒரு விரிவான விவாதம் இல்லை. எனினும் நம்முடைய பிரச்சனைகளை அவர் கூர்ந்து கவனிப்பதாக உறுதியளித்துள்ளார்.
அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம்.
தோழமை வாழ்த்துக்களுடன் ஆர் ராஜசேகர் மாநிலச் செயலாளர் 26.9.23
0 Comments