Latest

10/recent/ticker-posts

19.10.23ல் சக்தியாக நடைபெற்ற AIBDPA மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம்

சக்தியாக நடைபெற்ற AIBDPA மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம்-19.10.23

 



அருமை தோழர்களே, வணக்கம்.....
                    மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் 19.10.23 அன்று தோழர். N. உத்தரகுமார், மாவட்ட தலைவர் தலைமையில் தல்லாகுளம் TRC யில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அஞ்சலி உரையை தோழர். K. N. செல்வன் நிகழ்த்தினார். வரவேற்புரை மற்றும் அஜண்டா அறிமுக உரையை தோழர். C. செல்வின் சத்தியராஜ், மாவட்ட செயலர் நிகழ்த்தினார். செயற்குழு உறுப்பினர்களுக்கு ஐந்து பக்க செயற்குழு விவாத குறிப்பு வழங்கப்பட்டது. NCCPA அகில இந்திய மாநாடு நன்கொடை, கிளைமாநாடுகள், உறுப்பினர் பதிவேடு தயாரித்தல் மற்றும் 15 வது சங்க அமைப்பு தினத்தை கொண்டாடுவது உள்ளிட்ட விவாத குறிப்பு ஏகமனதாக ஏற்று கொள்ளப்பட்டது. 

   





      தோழர். R. ராஜசேகர் மாநில செயலர் சிறப்புரையாக மதுரை மாவட்டத்தில் தீர்க்கப்பட்ட பிரச்சனைகள், தீர்க்க வேண்டிய பிரச்சனைகளுக்கான விளக்கம், NCCPA - AIC பற்றி ஓய்வூதிய மாற்றம்- நீதிமன்ற தீர்ப்பு- நமது நிலை மற்றும் இன்றைய அரசியல் போன்றவற்றை விளக்கமாக பேசினார். அவரது பேச்சு அனைவரையும் ஈர்த்தது.

      தோழர். M. செல்வராசன் மாநில சிறப்பு அழைப்பாளர், தோழர். S. ஜான் போர்ஜியா மாநில உதவிசெயலர், தோழர். G. சுந்தரராஜன் மாநில அமைப்பு செயலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தோழர். P. ரிச்சர்ட் DS BSNLEU & தோழர் M.சித்திராமணி DS TNTCWU வாழ்த்துரை வழங்கினார்கள்.

      தோழர். பாண்டியன் (84) திண்டுக்கல், தோழர் தர்மலிங்கம் (72) மதுரை, நமது சங்கத்தில் புதிய உறுப்பினராக சேர்ந்தார்கள், அவர்களுக்கு மாநில செயலர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப் பட்டார்கள்.

              எட்டு பெண்கள் உள்பட 65 தோழர்கள் கலந்து கொண்டது அனைவராலும் பாராட்டப்பட்டது. தோழர். இஸ்டோரி TT ஓய்வு, தோழர். கிருஷ்ண மூர்த்தி TT ஓய்வு ஆகியோர் தலா ரூ 1000/- கொடுத்து மதிய உணவு செலவிற்கு உதவினார்கள். அவர்களுக்கு செயற்குழு நன்றியை தெரிவித்து கொண்டது.

               NCCPA அகில இந்திய மாநாட்டிற்கான ஒதுக்கீடு ரூ20,000ல், நாம் முதல் தவணையாக ரூ 5,000 மாநில செயலரிடம் வழங்கினோம்.

          நிறைவாக தோழர். C. தனபால் மாவட்ட உதவி செயலர் நன்றிகூற செயற்குழு இனிதே நிறைவு பெற்றது.

தோழமையுடன்
C.செல்வின் சத்தியராஜ், DS AIBDPA MADURAI.

Post a Comment

0 Comments