Latest

10/recent/ticker-posts

21.10.23 - AIBDPA சங்க அமைப்பு தினம் - சிறப்பாக அனுசரிப்போம் !!

21.10.23 -AIBDPA சங்க அமைப்பு தினம் - சிறப்பாக அனுசரிக்கவும் !!

தோழர்களே !

           AIBDPA என்கின்ற மாபெரும் ஓய்வூதியர் சங்கம், 14 ஆண்டுகளை நிறைவு செய்து, 15வது ஆண்டில் பெருமையுடன் அடியெடுத்து வைக்கின்றோம் .

ஆம், தோழர்களே !
               இதே 21, அக்டோபர் 2009 - அகில இந்திய DOT - BSNL ஓய்வூதியர் சங்கம் (AIBDPA) டெல்லியில் ஒரு செமினாரின் அமைக்கப்பட்டது.

           நம் சங்கத்தின் தோற்றமும், ஓய்வூதியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நம் இடைவிடாத போராட்டங்களும், முன்னெடுப்புகளும், அவற்றின் வெற்றியும்  வர்க்க நலன் சார்ந்த மற்ற ஓய்வூதிய சங்க உறுப்பினர்களைக் கூட ஈர்த்துள்ளது. இதன் மூலமாக நமது சங்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் ஏறுமுகம் கண்டது.

        நம் சங்கம்  மேலும் NCCPA, TUI(P&R) இரண்டு சங்கங்களுடன் இணைந்து போராடி வருகின்றது. NCCPA தங்களின் நான்கு கட்ட, தொடர் போராட்டத்தில் நமது கோரிக்கையான பென்ஷன் ரிவிஷன் பற்றித் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. சமீபத்திய NCCPA வின் டெல்லி பாராளுமன்ற பேரணியில், நமது உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தவிர BSNLEU, AIBDPA, BSNLCCWF சேர்ந்த கூட்டமைப்பின் பங்கு திருவனந்தபுரத்தில் நடந்த TUI (P&R) ஆசிய பகுதி மாநாட்டிலும் அதிகமாக இருந்தது எனலாம்.

          இந்த 15 வது அமைப்பு தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில், நம்முடைய முக்கியமான, தலையாய கோரிக்கையான பென்ஷன் மாற்றம் தீர்க்கப்படாமல் உள்ளது. மட்டுமல்ல, CAT நீதிமன்றத் தீர்ப்பால் பாதிப்பும் அடைந்துள்ளது.

          உண்மையாகச் சொல்வதெனில் DOT நிர்வாகம் 5,10,15 சதவீத உயர்வுகளுக்கான கணக்கீடுகளை கணக்கிட்டு, அமைச்சரவைக்கு அனுப்புவதற்குத் தயாராக இருந்த சமயம் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. தற்போது, நமக்குக் கிடைத்த சில சங்கங்களின் செய்திகளின் படி (இவை நீதி மன்றம் சென்ற சில சங்கங்கள்), நிர்வாகம் மேல் முறையீடு செய்யும் என்பதே.
எனவே கிடைத்த ஒரு நம்பிக்கையின் கீற்றும் மறைந்து வருகிறது என்பதும், CAT தீர்ப்பை, DOT நிர்வாகமே ஏற்று கொண்டு உத்தரவு போட்டு விட்டதாக  உயர்த்திச் சொல்லும் போக்கும் அதிகரித்து வருகிறது என்பதும் கண் முன்னே தெரிகிறது.

   எனவே சூழ்நிலைகளை குறித்து உண்மைகளை உறுப்பினர்களிடம் சேர்ப்பதும், இந்த 14 வருடங்களில் நமது சாதனைகளை, எப்படித் தொடர் போராட்டங்கள் மூலமாகவே அடைந்தோம் என்பதைக் கொண்டு செல்ல வேண்டும்.

நம்மைப் பொருத்தவரை, பென்சன் ரிவிஷன் பிரச்சினை, அனைவருக்கும் 2017 க்கு முன், பின் என்ற வேறுபாடு இல்லாமல், தீரும் வரை போராட்டங்கள் தொடரும் என்பதே உண்மை.

       வரும் 2023 நவ. 19, 20 தேதிகளில் பூனேயில் நடைபெறும் மந்திய சங்க செயற்குழுவில் மேற்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு, தேவையான முடிவுகள் எடுக்கப்படும்.

       எனவே வரும் 15 வது அமைப்பு தினத்தை வழக்கம் போல சிறப்பாக, கொடியேற்றி, கருத்தரங்கம் / கூட்டங்கள் நடத்தி அனுசரிக்க வேண்டும். முடிகின்ற இடங்களில் உணவு மற்றும் துணிகளை இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மத்திய சங்கம் கேட்டுக் கொள்கிறது.

நிகழ்ச்சிகளைப் பற்றிய புகைப்படம், அறிக்கைகளை பகிர்ந்து கொள்ளவும் என்று கூறிக் கொள்கிறோம்.

வாழ்த்துகளுடன்,
*K.G.ஜெயராஜ்*
*General Secretary*
AIBDPA CHQ

Fwd by
*R.ராஜசேகர்*
*மாநில செயலர்*
AIBDPA TN
16.10.23

OBSERVE 15TH FOUNDATION DAY BEFITTINGLY on 21-10-2023.

Dear Comrades,

AIBDPA, the mighty organisation is completing 14 years and moving on to the 15th year with pride . Yes, it was on 21st October, 2009, All India BSNL DOT Pensioners Association was formed in the Convention  held in New Delhi, as per the decision of BSNLEU.

The formation of the organisation and  its vibrant functioning by conducting countless struggles to achieve the demands had positive impact on other class conscious pensioners organisations also. This has naturally resulted in strengthening the main stream of Pensioners movement in the country.

AIBDPA continues to be one of the important affiliates of both NCCPA and Trade Union International (Pensioners & Retirees). NCCPA included pension revision also in the 15 point charter of demands and launched agitations, the last one being the four phased agitational programme culminated in the Parliament March on 21st July, 2023. We are the dominant participant in the struggles of the Coordination Committee of BSNLEU, AIBDPA and BSNLCCWF. AIBDPA took the leading role in successfully holding the 2nd Asia Regional Conference of TUI (P&R) at Thiruvananthapuram on 1st October, 2023.

When we celebrate the 15th Foundation Day, there are serious concerns about the settlement of the most burning issue of pension revision consequent to the Delhi CAT judgment. Actually, DoT had almost completed the process with a new proposal based on the calculations of financial implications of 5,10, and 15 per cent of fitment. However, final decision was deferred when the cases filed by certain pensioners Associations moved to the final stage. Now, the DoT, according to some of the petitioner organisations, has decided to file appeal in the High Court against CAT judgment. So uncertainty looms large while some people are busy in glorifying the CAT judgment, as if the order is being issued by DoT.

So let us explain the situation to the general members while to be proud of the significant achievements made during these 14 years.
As far as, AIBDPA is concerned, we are committed to continue the struggle until pension revision is achieved both to the pre 2017 and post 2017 retirees without any anomaly . We will definitely discuss it with all the seriousness and take appropriate decision in the ensuing Central Executive Committee meeting being held at Pune on 19-20 November, 2023.

CHQ calls upon to observe the 15th foundation day on 21-10-2023 in a befitting manner by hoisting the flag, holding meeting/seminar and distributing food and clothes to the needy.

Please send the reports and photos to CHQ.

With warm Greetings,

K G Jayaraj
General Secretary

Post a Comment

0 Comments