Latest

10/recent/ticker-posts

விருதுநகர் மாவட்ட 5 வது விரிவடைந்த மாவட்ட செயற்குழு & அமைப்பு தின கருத்தரங்கு

விருதுநகர் மாவட்ட 5 வது விரிவடைந்த மாவட்ட செயற்குழு & அமைப்பு தின கருத்தரங்கு

  




தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

         21.10.2023 காலை 10.30 மணிக்கு நமது AIBDPA சங்கத்தின் 15 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு விருதுநகர் Dy. G. M அலுவலகம் முன்பு தோழர் ஜி. செல்வராஜ் அவர்கள் தலைமையில் தோழர் ராமகிருஷ்ணன் SI(O) SVK அவர்கள் சங்க கொடியை தோழர் சிவஞானம் மாவட்ட உதவி செயலாளர் அவர்களின் கோசங்கள் முழங்க ஏற்றி சிறப்பித்தார்.

        அதன் பின்னர் காலை 11.15 மணிக்கு நடைபெற்ற 5 வது விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் M.R.V நினைவு அரங்கம் விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழர் ஜி. செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் க. புளுகாண்டி மாவட்ட செயலாளர் வரவேற்பு உரையும் விளக்கவுரையும் நிகழ்த்தினார். தோழர்கள் எஸ். மோகன் தாஸ், அகில இந்திய உதவி தலைவர் AIBDPA மற்றும்தேனி வசந்தன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.            

            தோழர். பெருமாள்சாமி மாநில உதவி தலைவர், AIBDPA, S. C மாரிகனி வங்கி ஊழியர் சங்கம், தோழர் குருசாமி தமிழ்நாடு அனைத்து துறை அரசு ஊழியர் சங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் பொன்ராஜ் ராஜபாளையம் கிளைச் செயலர் தோழர் முத்துசாமி சிவகாசி கிளைச் செயலர் ஆகியோர் பேசினார்கள். இறுதியில் தோழர் மணிவண்ணன் செயற்குழுவை நன்றி கூறி முடித்து வைத்தார்.

       பெண் தோழர்கள் 20 பேரும் ஆண் தோழர்கள் 50 க்கும் மேற்பட்ட தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்களும் மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகளும் புரட்சிகர வாழத்துக்களையும் தெறிவித்துகொள்கிறது.

தோழமையுடன்
க. புளுகாண்டி
மாவட்ட செயலாளர் விருதுநகர்.

Post a Comment

0 Comments