அனைவருக்கும் AIBDPAவின் 15வது அமைப்பு தின வாழ்த்துக்கள் !!
October 20, 2023
அனைவருக்கும் AIBDPAவின் 15வது அமைப்பு தின வாழ்த்துக்கள் !!
தோழர்களே, நமது BSNL-DOT ஓய்வூதியர்களின் போர்வாள் AIBDPA சங்கத்தின் 15வது அமைப்பு தினம் இன்று, அக்டோபர் 21 அன்று கொண்டாடப்படுகிறது.
மாவட்டங்கள், கிளைகளில், சாத்தியமான இடங்களில் எல்லாம் கொடியேற்றுவது, கிளை கூட்டங்கள் போடுவது, இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, ஆதரவற்றவர்களுக்கு உணவுகள் துணிகள் வழங்குவது போன்ற வகைகளில் நாம் நம்முடைய அமைப்பு தினத்தை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இன்று நம் முன்னால் இருக்கக்கூடிய ஓய்வூதிய மாற்றம் பிரச்சினைகளும், மருத்துவப் படிகள் பெறக்கூடிய பிரச்சனையிலும், நாம் தொடர்ந்து இந்த அரசாங்கத்தினுடைய, BSNL-DOT நிர்வாகத்தினுடைய ஓய்வூதியர் விரோத போக்கை எதிர்த்து தொடர் இயக்கங்களை நடத்துவோம்.
போராடி பெற்ற உரிமைகளையும் சலுகைகளையும் பாதுகாத்துக் கொண்டே, புது உரிமைகளுக்காக இயக்கத்தை முன்னெடுத்துச் சொல்லுவோம்.
தோழமை வாழ்த்துக்களுடன் ஆர் .ராஜசேகர் மாநில செயலாளர் 21 10 23
0 Comments