Latest

10/recent/ticker-posts

AIBDPA மாநிலத் தலைவர்கள் Jt CCA (Pension) திருமதி கௌதமி அவர்களுடன் சந்திப்பு

AIBDPA மாநிலத் தலைவர்கள் Jt CCA (Pension) திருமதி கௌதமி அவர்களுடன் சந்திப்பு

தோழர்களே,
                  இன்று திட்டமிட்டு இருந்த Jt CCA (PDA) அவர்கள் கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் நடைபெறவில்லை.

         எனினும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி *Jt CCA (பென்ஷன்) திருமதி கௌதமி* அவர்கள் சங்கங்களை அழைத்து பல விஷயங்களை விவாதித்தார்கள். அவர்களுடன் *Dy CCA திருமதி எஸ்தர் அவர்களும் , AO (பென்ஷன்) திருமதி ஜெகதீஸ்வரி* அவர்களும் உடன் இருந்தனர்.

                 நமது சங்கத்தின் சார்பில் *மாநிலத் தலைவர் தோழர் சி கே நரசிம்மன் அவர்களும் மாநிலச் செயலாளர் R.ராஜசேகர்* அவர்களும் கலந்து கொண்டார்கள்.

1) DOT ID கார்டு :
     5,000 ID கார்டுகள் நவம்பர் மாதம் விநியோகிக்கப்படும். மேலும் 5,000 அடுத்த மாதம் வினியோகிக்கப்படும்.
       ID கார்டு விநியோகம் சென்னை, திருச்சி, மதுரை, கோவை நகரங்களில் நடைபெறும் Life சர்டிபிகேட் மேளாவுடன் சேர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாராக உள்ள ID கார்டுகள், அவை விநியோகிக்கப்படும் விவரங்கள் Sampamn portalல் அறிவிக்கப்படும்.

இப்பணியை செய்து முடிக்க ஓய்வூதியர் சங்கங்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. நாமும் ஒத்துழைப்பதாக உறுதி அளித்துள்ளோம்.

2) விடுபட்டு போன Bank Migration நவம்பர் மாத இறுதிக்குள் முடிந்துவிடும்.

3) லைஃப் சர்டிபிகேட் கொடுக்கும் முறையில் மாற்றம் வேண்டி விவாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் ஒரு மாதம் என்று தீர்மானிக்கப்பட்டு அந்த மாதம் அனைவரும் லைவ் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடு சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

4) பென்சனர் குறைதீர்க்கும் மையம்

       ஓய்வூதியர்களின் குறைகளை பதிவு செய்து, உடனடியாக தீர்வு காணவும் நான்கு புதிய கவுண்டர்கள் CCA அலுவலகத்தில் திறக்கப்படும். நான்கு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படும்.

Mobile எண்கள் மாற்றம்,

பிறந்த தேதி மாற்றம்,

பென்ஷன் life certificate சம்பந்தமாக,

பென்ஷன் arrears சம்பந்தமாக,

குடும்ப ஓய்வூதியம் சம்பந்தமாக உள்ள அனைத்து குறைகளையும் இதில் நேரடியாக கேட்டு பதிவு செய்து தீர்வு காணலாம். நாம் இந்த முயற்சியை வரவேற்கின்ற அதே நேரத்தில் தொலைபேசிகள் முழுமையாக பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறோம்.

5)மொபைல் நம்பர் மாற்றத்துக்கு தற்போது pending உள்ள கம்ப்ளைன்ட் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என்று கேட்டு இருக்கின்றோம்.

6) LPD பிரச்சனை சம்பந்தமாக விவாதித்ததுள்ளோம். DOT அலுவலகத்திலிருந்து பதில் எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டது. நாமும் நம்முடைய மத்திய சங்கத்தின் மூலமாக உடனடியாக சாதகமான பதில் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்திருக்கிறோம்.

7) குடும்ப ஓய்வூதியர் பிரச்சனைகள் காலதாமதம்

         ஓய்வு பெறுவோரின் பென்ஷன் செட்டில்மெண்ட் சம்பந்தமாக, குடும்ப ஓய்வூதியர் பென்ஷன் மாற்றம் தொடர்பாக clarification பெறுவதில் அல்லது தகவல் பெறுவதில் இருக்கக்கூடிய தேவையற்ற காலதாமதத்தை நாம் சுட்டிக் காட்டிணோம். குறிப்பிட்ட ஒரு சில பிரச்சினைகளில் மூன்று மாதத்திற்கு மேல் ஒரு கடிதம் போடுவதற்கு மட்டும் கால அவகாசம் ஆகி இருக்கிறது என்பதனையும் குறிப்பிட்டோம். வரக்கூடிய காலங்களில் அதை சரி செய்வோம் என்று உறுதியளித்திருக்கிறார்கள்.

தோழர்களே,
              இன்று Jt CCA Pension அவர்களோடு நடைபெற்ற கூட்டத்தில் நல்ல பல விஷயங்கள் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. கூட்டம் பயனுள்ளதாக இருந்தது. வரக்கூடிய காலங்களில் இவற்றை முழுமையாக அமல்படுத்துவதற்கு நாம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

தோழமை வாழ்த்துக்களுடன்
*ஆர் ராஜசேகர்*
*மாநிலச் செயலாளர்*
1.11.23

Post a Comment

0 Comments