Latest

10/recent/ticker-posts

AIBDPA வேலூர் மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்

AIBDPA வேலூர் மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்

 




தோழர்களே,
           வேலூர் மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு கூட்டம் 09.10.2023 அன்று காலை 11 மணியளவில் தோழர். C. ஞானசேகரன் மாவட்டத் தலைவர் அவர்கள் தலைமையில் சிறப்பாக துவங்கியது. தோழர். வி. ஏழுமலை மாவட்ட செயலாளர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு கூட்டத்தை தோழர். பொன். லோகநாதன் மாநில துணைத் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

         தோழர். சி. தங்கவேலு NCCPA மாவட்ட செயலாளர், மற்றும் தோழர். B. மாரிமுத்து மாவட்ட செயலாளர் BSNLEU- ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர். P. சரவணன் மாவட்ட துணைச் செயலாளர் அவர்கள் முதியோர் குறித்து அவரெழுதிய கவிதையை வாசித்தது கூட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.


         நமது மாநிலச் செயலாளர் தோழர். R. ராஜசேகர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் ஆற்றிய உரையில் பென்சன் மாற்றம் பற்றிய CAT தீர்ப்பு குறித்தும், IDA சம்பளத்தில் 15% பிட்மென்ட்டுடன் ஓய்வூதிய மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கைக்காக கடந்த காலங்களில் நாம் நடத்திய போராட்டங்கள் குறித்தும், வரும் காலங்களில் நாம் நடத்த இருக்கின்ற இயக்கங்கள் குறித்தும், 01.10.2023 அன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான TUI மாநாடு குறித்தும், நம் சங்க முயற்சியால் நடைபெற்ற மெடிக்கல் பில்களுக்கான சிறப்பு அதாலத் மற்றும் பென்சன் அதாலத் ஆகியவை குறித்தும், சொசைட்டி பிரச்சினையின் இன்றைய நிலை குறித்தும், உழைக்கும் வர்க்க அலுவலகத்தில் நடைபெறும் பணிகள் குறித்தும், இன்னும் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்தும் மிக அருமையான உரையினை ஆற்றினார்.

           ஆறு பெண் தோழியர்கள் உட்பட சுமார் நூறு (100) உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மதிய உணவு இடைவேளைக்குப் பின் மீண்டும் கூடிய செயற்குழு கூட்டத்தில்

1.தோழர். G. கிருஷ்ணமூர்த்தி வேலூர்,

2.தோழர். D. இராசேந்திரன் ஆம்பூர்,

3.தோழர் T.மணி ஆரணி,

4.தோழர் P. ரகுபதி ராணிப்பேட்டை,

5.தோழர் K. தேவன் திருப்பத்தூர்,

6.தோழர் A. கிருஷ்ணன் திருவண்ணாமலை

7.தோழர் R. லோகநாதன் அரக்கோணம்

ஆகிய கிளைச் செயலாளர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு தங்கள் கிளைகளின் அமைப்பு நிலை மற்றும் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசினர்.

பின்னர்
வி. ஏழுமலை மாவட்ட செயலாளர்* அவர்கள் தமது தொகுப்புரையில் தீர்க்கப்பட்ட பிரச்சினைகள், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் மற்றும் தற்போதைய நிதிநிலை மற்றும் NCCPA மாநாட்டிற்கு நம் பங்காக நாம் தர வேண்டிய ரூ. 25000 மற்றும் உழைக்கும் வர்க்க கட்டிட நிதி ரூபாய் 10000 ஆகியவை பற்றியும் அதை நாம் தந்தாக வேண்டிய கட்டாயம் குறித்தும் விரிவாக பேசினார்.

பெண்கள் கிளை ஒன்றை துவக்குவது என்ற முடிவின் அடிப்படையில் தோழியர்கள்
1.சி. சுமதி, 2.G.பிரபாவதி 3.V.மாலா
ஆகிய மூவரும் அமைப்பாளர்களாக இருந்து விரைவில் அக்கிளையை ஆரம்பிக்க முயற்சி செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

முடிவில் தோழர். P. முருகன் மாவட்ட துணைச் செயலாளர் அவர்கள் நன்றி கூற செயற்குழு இனிதே முடிவுற்றது.

உடல்நலன் விசாரிப்பு.
அதன்பின் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தோழர். P. சீதரன் அவர்களின் வீட்டிற்கு மாநில செயலாளர் R. ராஜசேகர், தோழர். சி. ஞானசேகரன் மாவட்ட தலைவர் தோழர் பி. லோகநாதன் மாநில துணைத் தலைவர் மற்றும் மேலும் பத்து தோழர்களுடன் சென்று சந்தித்து ஆறுதல் கூறி விட்டு வந்தது சிறப்பு.

ஓய்வூதியர் அனைவரும் தங்கள் உடல் நலனில் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன்...

தோழமையுள்ள
வி ஏழுமலை
மாவட்ட செயலாளர்.
வேலூர் AIBDPA
10.10.23



Post a Comment

0 Comments