சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட AIBDPA கோவில்பட்டி கிளை மாநாடு
October 18, 2023
சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட AIBDPA கோவில்பட்டி கிளை மாநாடு
தோழர்களுக்கு வணக்கம்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிளையின் மூன்றாவது கிளை மாநாடு 16-10-2023 திங்கட்கிழமை அன்று காலை 1030 மணியளவில் கோவில்பட்டி தொலைபேசி நிலையத்தில் வைத்து கிளைத் தலைவர் தோழர். C. மீனாட்சி சுந்தரம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக தேசியக் கொடியை தோழர். K.அர்சுணன், சங்கக் கொடியை தோழர்.K. திருவட்டாப் போத்தி ஆகியோர் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தனர். இனிப்பும் வழங்கப்பட்டது. கிளைச் செயலாளர் தோழர். P. முத்துராமலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட உதவிச்செயலர் தோழர் K. சுப்பையா தியாகிகளுக்கு அஞ்சலி உரை நிகழ்த்தினார் .
கிளை மாநாட்டை துவக்கி வைத்து மாவட்டச் செயலர் தோழர் P. ராமர் துவக்க உரையாற்றினார் . நமது அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் சிறப்புரையாற்றினர்.
கோவில்பட்டி DE திரு. G. மூக்கையா, தூத்துக்குடி மாவட்டச் சங்க ஆலோசகர் தோழர். T.K.ஶ்ரீனிவாசன், மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன், BSNLEU மாவட்ட தலைவர் தோழர். M. ஜெயமுருகன், BSNLEU மாவட்ட செயலர் தோழர். G. ஶ்ரீதரன், தூடி கிளைச் செயலர் தோழர். A. சிவக்குமார், திருச்செந்தூர் கிளைச் செயலர் தோழர். P. முருகப்பெருமாள், செய்துங்க நல்லூர் கிளைச் செயலர் தோழர். A. ராதா கிருஷ்ணன், BSNLEU கிளைச் செயலர் தோழர். செண்பகமுத்து, TNTCWU நிர்வாகி தோழர். T. தங்க மாரியப்பன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கிளை மாநாட்டை சிறப்பாக நடத்திட மாநாட்டு நன்கொடையோடு கூடுதலாக பொருள் உதவி செய்த தோழர். K.அர்சுணன், உள்ளிட்ட BSNLEU AIBDPA TNTCWU கிளை நிர்வாகிகளுக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.
NCCPA அகில இந்திய மாநாட்டு நன்கொடையாக ரூபாய். 4,000/-மும் TNTCWU மாவட்ட கிளைக்கு ரூபாய். 1000/-மும் நன்கொடை வழங்கப்பட்டது.
புதிய நிர்வாகிகள் தேர்வை மாவட்ட செயலாளர் தோழர் P. ராமர் நடத்தி வைத்தார் .
கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கிளைத தலைவராக தோழர். R. மகேந்திரமணி, கிளைச் செயலாளராக தோழர் S. ஆறுமுகம் , கிளைப் பொருளாளராக தோழர். M. கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகளும் தேர்வாகினர்.
5 பெண் தோழர்கள் உட்பட 64 தோழர்கள் கலந்து கொண்ட மாநாட்டின் நிறைவாக புதிய கிளைச் செயலாளர் தோழர் S. ஆறுமுகம் நன்றி கூற கிளை மாநாடு இனிதே நிறைவுற்றது .
தோழமை வாழ்த்துக்களுடன்,
S. ஆறுமுகம் , கிளைச் செயலர், AIBDPA, கோவில்பட்டி, 16-10-2023.
0 Comments