Latest

10/recent/ticker-posts

எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற நெல்லை மாவட்ட அம்பை கிளை மாநாடு !!

மிகவும் எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற நெல்லை மாவட்ட அம்பை கிளை மாநாடு

   





        திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கிளையின் இரண்டாவது கிளை மாநாடு 02-10-2023 திங்கட்கிழமை அன்று காலை 10 மணியளவில் தோழர். C. சுவாமிகுருநாதன் இல்லம் அம்பாசமுத்திரத்தில் வைத்து கிளைத் தலைவர் தோழர். ‌P. முருகன் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் தோழர். S. P. கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார் .

    நெல்லை மாவட்ட உதவித் தலைவர் தோழர். C.சுவாமிகுருநாதன் தியாகிகளுக்கு அஞ்சலி உரை நிகழ்த்தினார். கிளை மாநாட்டை துவக்கி வைத்து மாவட்டச் செயலர் தோழர். S. முத்துசாமி துவக்க உரையாற்றினார் .

      அவரது துவக்க உரையில் நமது மாநிலத் தலைவர் தோழர். C.K. நரசிம்மன், மாநிலச் செயலர் தோழர். R.ராஜசேகர், மாநிலப் பொருளாளர் தோழர் S.நடராஜா ஆகியோர் மாவட்டச் செயலரை அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததாகக் கூறினார்.

            நமது அகில இந்திய துணைத் தலைவர் தோழர் S. மோகன்தாஸ் மற்றும் அகில இந்திய உதவி பொருளாளர் தோழியர். V. சீதாலட்சுமி சிறப்புரையாற்றினர்.

     






           தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர், நெல்லை மாவட்ட தலைவர் தோழர். M. கனகமணி, மாவட்ட உதவிச் செயலர் தோழர். S. சங்கரநாராயணன், வள்ளியூர் கிளை செயலாளர் தோழர். A. பிச்சுமணி, நெல்லை கிளை செயலாளர் தோழர் S.செல்லத்துரை, சங்கரன்கோவில் கிளைப் பொருளாளர் தோழர். V. ராமநாதன், தென்காசி கிளை அமைப்பு செயலர்கள் தோழர். வேலுச்சாமி, தோழர். M.முருகேசன், பாளையங்கோட்டை கிளைச் செயலர் தோழர். P.சூசை, தென்காசி கிளைத் தலைவர் தோழர் R.ராமநாதன், கிளைச் செயலர் தோழர் K.கணேசன், கிளை பொருளாளர் தோழர் S. ராமசுப்பு மற்றும் BSNLEU நெல்லை மாவட்டத் தலைவர் தோழர். V. ஆண்டபெருமாள் , அம்பாசமுத்திரம் கிளைச் செயலர் தோழர். I. பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை மற்றும் வாழ்த்துரை வழங்கிய அத்தனை தோழர்களுக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்ததுடன் நினைவுப் பரிசாக ஒரு பேக்கும் வழங்கப்பட்டது.

           கிளை மாநாட்டை சிறப்பாக நடத்திட மாநாட்டு நன்கொடையோடு கூடுதலாக பொருள் உதவி செய்த கிளைத் தலைவர் தோழர். P. முருகன், கிளைச் செயலர் தோழர். S.P.கணேசன், கிளைப் பொருளாளர் தோழர். V. கல்யாணி, மாவட்ட உதவி தலைவர் தோழர். C. சுவாமி குருநாதன், தோழர். S. சண்முகம் ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.

கிளை மாநாட்டில் கலந்து கொண்ட தோழியர்கள் இரண்டு பேருக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்ததுடன் நினைவுப் பரிசாக ஒரு பேக்கும் வழங்கப்பட்டது.

பின்னர் ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு அறிக்கை வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வை மாவட்ட செயலாளர் தோழர் S. முத்துசாமி நடத்தி வைத்தார் .

கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக 

கிளைத் தலைவராக தோழர். P. முருகன், கிளைச் செயலாளராக தோழர். S. P. கணேசன், கிளைப் பொருளாளராக தோழர் V. கல்யாணி ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

நிறைவாக கிளைப் பொருளாளர் தோழர். V. கல்யாணி நன்றி கூற கிளை மாநாடு இனிதே நிறைவுற்றது .

தோழமை வாழ்த்துக்களுடன்,

S.P.கணேசன் ,
கிளைச் செயலர், AIBDPA,
அம்பாசமுத்திரம்,
02-10-2023.

Post a Comment

0 Comments