வெகு சிறப்பாக நடைபெற்ற கோவை மாவட்ட சூலூர் கிளை மாநாடு
October 13, 2023
வெகு சிறப்பாக நடைபெற்ற கோவை மாவட்ட சூலூர் கிளை மாநாடு
15.2.22 அன்று 19 பேர் கொண்டு துவங்கிய கிளை இன்று நடந்த கிளை மாநாட்டில் 31 தோழர்களாக உயர்ந்துள்ளனர். கிளை மாநாட்டிற்கு 27 தோழர்கள் பங்கேற்றனர். 15 பெண் தோழர்களில் 13 பெண் தோழர்கள் பங்கேற்றது சிறப்பு அம்சம். கிளை மாநாட்டில் ஒரு குடும்ப ஓய்வூதியர் புதியதாக இணைத்துக் கொண்டுள்ளார். கிளை மாநாடு கிளைத் தலைவர் தோழர் பாரதி மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தலைவர் உரைக்குப் பின் கிளைச் செயலர் தோழர் பாலசுப்பிரமணியம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலாளர் தோழர் குடியரசு கிளை மாநாட்டை வாழ்த்தியும் கிளையின் செயல்பாடுகள் பற்றியும் இன்றைய சூழலில் அகில இந்திய மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் நமது நிலை பற்றியும் எடுத்துக் கூறி மாநாட்டை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து தோழர். V. வெங்கட்ராமன் AIOS அகில இந்திய சங்கம் ஓய்வூதியர்களுக்காக எடுக்கும் நடவடிக்கைகளை பற்றி சுருக்கமாகும் மிக தெளிவாகவும் குறிப்பிட்டார். அடுத்து தோழர் சிவராஜ் AIRPA நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் இணைப்பு பற்றி பேசினார். தொடர்ந்து தோழர் ஜோசப் TNGPA வாழ்த்துரை வழங்கினார். துவக்க வரை சிறப்புரை வாழ்த்துரை வழங்கிய தோழர்களுக்கு கிளைசங்கத்தின் சார்பாக துண்டு அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அறிக்கை, வரவு செலவு கணக்கு, தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஏக மனதாக பொதுக்குழு ஏற்று கொண்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு மாவட்ட செயலாளர் நடத்திக் கொடுத்தார். முக்கிய நிர்வாகிகளாக தலைவர் தோழர் ஜெயக்குமார் திலகம் உதவித் தலைவர் தோழர் பாரதி மோகன் செயலாளர் தோழர் கிறிஷ்டி உதவி செயலாளர் தோழியர் இளம் பரிதி பொருளாளர் தோழர் சுப்பிரமணி மற்றும் 8 அமைப்புச் செயலர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய கிளை செயலாளர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
கிளை மாநாட்டை சிறப்பாக நடத்திய நிர்வாகிகளுக்கும் மற்றும் தோழர்களுக்கும் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் கோவை மாவட்டச் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது
0 Comments