AIBDPA தஞ்சை மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் 02-10-2023 அன்று மதியம் BSNLEU மாவட்டச் சங்க அலுவலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு தோழர். கே.பிச்சைக்கண்ணு மாவட்ட தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார். வரவேற்புரையோடு ஆய்படுபொருளையும் விளக்கி பேசினார் மாவட்ட செயலாளர் தோழர். S N. செல்வராஜ். கூட்டத்தில் மாவட்ட சங்கத்தின் கௌரவ ஆலோசகர் தோழர். பி. பக்கிரிசாமி அவர்களும், மாநில பொருளாளர் தோழர். S.நடராஜா அவர்களும் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகள் :-
1) முதியோர் தினத்தை அனைத்து சங்கங்களுடன் சேர்ந்து சிறப்பாக கொண்டாடுவது.
2) 21-10-2023 அன்று நமது AIBDPA சங்கத்தின் அமைப்பு தினத்தை மன்னார்குடியில் கிளை அமைத்து சிறப்புக் கூட்டம் நடத்தி கொண்டாடுவது.
3)16-09-2023 அன்றைய மாவட்ட செயற்குழு முடிவுகளை முறையாக அமுல்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்வது.
உறுப்பினர்கள் சேர்ப்பு இயக்கத்தை திட்டமிட்டு தொடர்ந்து நடத்துவது.
4) மாநில சங்கத்தின் வேண்டுகோளின்படி NCCPA அகில இந்திய மாநாட்டு நிதியினை குறிப்பிட்ட காலத்தில் வசூல் செய்து மாநில சங்கத்திற்கு அனுப்புவது
5) தலமட்டத்தில் ஊழியர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட சிறப்பான கவனம் செலுத்துவது.
தோழர்களே ! எடுக்கப்பட்ட முடிவுகளை சிறப்பாக நிறைவேற்ற முனைப்போடு செயல்படுவோம்.
0 Comments