ஓய்வூதியம் மாற்றம் - CAT தீர்ப்பும் விளைவுகளும் - டெலிபென்சனர் தலையங்கம்
October 09, 2023
டெலிபென்சனர் தலையங்கம் -ஜூலை-செப். 2023.
ஓய்வூதியம் மாற்றம் - CAT தீர்ப்பும் விளைவுகளும்
ஒரு சில பென்சன் சங்கங்களால் போடப்பட்ட BSNL MTNL ஓய்வூதியர்களின் பென்சன் மாற்றம், ஏழாவது சம்பளக் கமிஷன்படி என்று கோரிய வழக்கில், மத்திய தீர்ப்பாயத்தின் 20.09.2023 தீர்ப்பு, பல வினாக்களைக் கொண்டு வந்துள்ளது.
நம்மில் பல ஓய்வூதியர்கள் உடனே பென்சன் ரிவிஷன் VII CPCபடி திருத்தப்படும் என்றும், உத்தரவு வெளியாகி விடும் என்றும் நினைக்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் சில ஓய்வூதியர் சங்கங்களின் செய்திகளை படித்துப் பார்ப்பது நல்லது. அவற்றின் படி, டெல்லி உயர்நீதி மன்றத்தில் கேவீட் மனு தாக்கல் செய்கிறோம் என்கிறார்கள். இது மேலும் உறுதிப்படுகிறது, SNPWA சங்கச் செய்தி மூலம். அது என்ன சொல்கிறது? DOT இயக்குனர், தாங்கள் சட்ட ஆலோசனை பெற்று அப்பீல் செய்யப் போகிறோம் என்பது அந்தச் செய்தி.
இதன்படி, எப்பொழுது இறுதி தீர்ப்பு வரும் என்பதை யாருமே கணிக்க முடியாது. இங்கே, AIBSNLPWA சங்கத்தைச் சேர்ந்த திரு. D. கோபாலகிருஷ்ணன் தந்த குரல் செய்தியும் உற்று நோக்கத் தக்கது. நம் ஆயுளில் இந்த நியாயத்தை பெற முடியாமல் போனாலும், நம் சந்ததியினர் இதை அனுபவிப்பார்கள்.மற்றொரு சங்கத் தலைவர் தன் செய்தியில், ஏற்கெனவே நிறைய பென்சனர்கள் மறைந்து விட்டார்கள்; அரசு அப்பீல் என்று சென்றால், இன்னும் ஆறேழு வருடங்களில் எவ்வளவு பேர் நம்மில் உயிருடன் இருப்போம் இந்த ரிவிஷனுக்குஎன்று கேட்டிருக்கிறார்.
ஆமாம், அது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான். இதன் காரணமாகத்தான் நாம், AIBDPA நீதிமன்றத்தை நாடவில்லை. மேலும், நாம் நம் ஊழியர்களை, ஓய்வூதியர்களை, அவர்களின் ஒன்று சேர்ந்த வலிமையை நம்புகிறோம். பேச்சு வார்த்தையின் மூலம், இணைந்த போராட்டத்தின் மூலம் வெல்வோம் என்ற நம்பிக்கையை இழக்கத் தயாரில்லை. இது கடந்த 24.08.2022 டெல்லி பேரணி, அதைத் தொடர்ந்து DOT (Member Services) உடனான 17.10.22 நடந்த சந்திப்பு போன்றவை நிரூபித்துள்ளன. அந்தச் சந்திப்பின் முடிவுகள், CAT க்குச் சென்ற சங்கங்கள் உள்ளிட்ட பலரால் வரவேற்கப்பட்டது. DOT நிர்வாகம், அவர்கள் கூறிய பூஜ்ய சதவீத மாற்றம் (zero percent fitment) ஏற்றுக் கொள்ளப்படாததால், பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டனர். CAT நீதிமன்ற இறுதி நிகழ்வுகள், DOT யின் முடிவை நிறுத்தி வைத்திருக்கலாம்.
15 % பென்சன் மாற்றம், சம்பள மாற்றத்தில் இருந்து விடுபடுதல் போன்றவை நம் AIBDPA சங்கத்தின் கோரிக்கை மட்டுமல்ல; BSNL, MTNL சார்ந்த எட்டு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கை. சில வழக்கு தொடுத்த சங்கங்கள் கூட இதற்காக கடுமையான போராட்டங்கள் நடத்தின. AUAB கூட்டமைப்பு இதற்காக பல போராட்டங்களை நடத்தியது.
AIBDPA ஏழாவது CPCயின் படி மாற்றம் என்பதை சில பல காரணங்களால் ஏற்றுக் கொள்ளவில்லை. IDAவின்படி அமைந்த நமது பென்சன், CDA அளவீடுகளை விட அதிகம். மேலும் வருடத்திற்கு 4 முறை IDA படி நமது பென்சன் DA மாறுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. கடந்த பென்சன் மாற்றம் 1.01.2007ல் 30% உயர்வு PRC மூலமே கிடைத்தது என்பதும் உண்மை. இதன் காரணமாகவே, DOT நிர்வாகமே, நாம் அதிக பென்சன் வாங்குவதாக புலம்புவார்கள். எனவே, CPCபடி மாற்றம் என்பது குழப்பமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. அது நம்மை 2000க்கு முந்தைய CDA முறைக்கு கொண்டு செல்லும். இது நீதி மன்ற தீர்ப்பிலேயே "Strict pairity with central govt pensioners" என்பதின்படி என்று DOT Member Services அவர்களே கோடிட்டு காட்டினார்.
மற்றொரு பிரச்சினை 2017க்குப் பின் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் என்பது. கோர்ட் தீர்ப்பு 2017க்கு முந்தைய பென்சனர்களுக்கானதுதான். சில சங்கங்கள் சொல்வது போல அது 2017க்குப் பின் ஓய்வு பெற்றவர்களுக்கும் பொருந்தும் என்பது ஏற்புடைத்தது அல்ல.
எனவே இந்த பென்சன் மாற்றம் என்ற மாபெரும் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடும்
Editorial of Tele Pensioner July - September, 2023.
PENSION REVISION - CAT JUDGEMENT AND IT'S IMPACTS..
After the PBCAT, New Delhi pronounced its judgment on pension revision on 20-09-2023 allowing a set of OAs for the pension revision of BSNL and MTNL absorbed pensioners on 7th CPC fitment, many questions are raised about the actual implications of the judgment.
Some of the pensioners are under the impression that orders will be issued immediately revising the pension on 7th CPC fitment. But they may please go through the messages of certain petitioner organisations that they are filing caveat in the Delhi High Court as they expect the government is certain to file appeal. This has been confirmed in the message of SNPWA stating that Director (E) has stated that DoT has got the legal advice of filing the appeal and it is being processed.
In that case, nobody can predict as to when final verdict will be pronounced. In this context, it is worth mentioning that Shri. D Gopalakrishnan, President of AIBSNLPWA had in a voice clip circulated after filing the case, stated that we may not get the benefit in our lifetime but at least the next generation may be benefited. Now, another President of a petitioner organisation has commented in a message that thousands of Pensioners have already left this world and if the government decides to go on appeal, it is certain to take another six, seven years. In that event how many of us would remain alive to avail the benefits of pension revision ?
Yes, it is a million dollar question indeed. This is one of the reasons AIBDPA did not resort to legal recourse. Another important reason is that we have the faith in the mighty strength of the employees and pensioners. We never lose the hope of achieving pension revision through negotiations supported by the struggles. This has been proved to be right that after the powerful Sanchar Bhawan March on 24-08-2022 by AIBDPA, DoT held a meeting chaired by the then Member (Services) with all pensioners Associations on 17th October, 2022. The outcome of that meeting was welcomed by almost all the pensioners organisations, including the petitioner organisations. DoT had completed the consultations on the new proposal as all the organisations had rejected the offer of zero percent fitment in one voice. There is every reason to believe that the final phase of CAT proceedings, has made the DoT to shelve the decision.
The demand of pension revision with 15% fitment, as per 3rd PRC, delinking wage revision was not the demand of AIBDPA alone. There are eight pensioners organisations of BSNL and MTNL in the Joint Forum, including some of the petitioner organisations which organised strong struggle on this demand. AUAB also conducted several struggles including strikes on the same demand.
AIBDPA did not support the demand of 7th CPC fitment for obvious reasons. We are getting our pension on IDA pay scales, which is higher than the CDA scales. So also 4 instalments of IDA in a year. We got the last pension revision with 30% fitment as per 2nd PRC with effect from 01-01-2007. Because of these, the DoT bureaucracy often say that we are getting higher pension. So fixation on 7th CPC fitment on IDA scale is complicated and it is dangerous also with the possibility of DoT reverting back to CDA scales from 01-10-2000. It is already hinted by the Member (Services) during the discussion with the petitioner organisations quoting the mention in the CAT order of " maintaining strict parity with central government pensioners."
Another serious concern is the pension revision of post 2017 retirees. The prayer in the OAs are only for pension revision for pre 2007 pensioners. The petitioner organisations' clarification that they have included post 2017 retirees as applicants are far from satisfactory.
So AIBDPA is committed to continue the struggle until our most important and burning issue of pension revision is achieved.
0 Comments