LIFE CERTIFICATE MELA - உயிர் வாழ்சான்று பதிவிடும் மேளா !!
October 19, 2023
LIFE CERTIFICATE MELA உயிர் சான்று பதிவு செய்யும் மேளா !!
தோழர்களே, DOT CCA அலுவலகம் லைவ் சர்டிபிகேட் மேளா நடத்துவதற்கு அறிவிப்பு கொடுத்துள்ளார்கள். நவம்பர் மாதத்தில் சுமார் 12000 ஓய்வூதியர்கள் லைப் சர்டிபிகேட் புதுப்பிக்க வேண்டும். ஆகவே தமிழகத்தின் நான்கு மையங்களில் கீழ்க்கண்ட தேதிகளில் இந்த மேளா நடைபெற உள்ளது.
சென்னையில் - நவம்பர்-1,2,3.
கோயம்புத்தூரில் - நவ - 6,7.
திருச்சியில் - நவ - 9, 10.
மதுரையில் - நவ-13 ,14 தேதிகளில்
தோழர்களே, இந்த மாவட்டங்களில் உள்ள தோழர்கள் மட்டுமின்றி அருகாமை மாவட்டங்களில் உள்ளவர்களும் இந்த மேளாவை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது.
உயிர்வாழ் சான்று பதிவிடச் செல்லும் ஓய்வூதியர்கள் கீழ்க்கண்ட சான்றுகள்
1) ஆதார் அட்டை நகல்
2) பெயர், PPO எண், போட்டோ உள்ள விபரங்கள் அடங்கிய PPO புத்தக நகல்
3) பான் அட்டை நகல்
4) விபரங்கள் நிரப்பட்ட உயிர்வாழ் சான்று படிவம் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
0 Comments