Latest

10/recent/ticker-posts

2023 நவம்பர் 19,20ல் பூனே நகரில் எழுச்சியாக நடைபெற்ற மத்திய செயற்குழு

பூனே நகரில் எழுச்சியாக நடைபெற்ற மத்திய செயற்குழு

 


2023 டிசம்பர் 1 முதல் 10 வரை ஓய்வூதிய மாற்றம் குறித்து விரிவான பிரச்சார இயக்கம் !

20% உறுப்பினர் உயர்வு !!

        நமது சங்கத்தின் மத்திய செயற்குழு பூனே நகரின் எமரால்டு ஹாலில், 2023 நவ. 19/20 தேதிகளில் விமரிசையாக, உற்சாகம் தரும் சூழலில் நடைபெற்றது.

       முதல் நாள், சங்கத்தின் காப்பாளர் தோழர். VAN நம்பூதிரி, தேசியக் கொடியை ஏற்ற, சங்கக் கொடி பொதுச்செயலர் K. G. ஜெயராஜ் அவர்களால் ஏற்றப்பட்டது*.

     பொது அமர்வுக்கு, தலைவர் தோழர். M. R. தாஸ் தலைமை தாங்கினார். அஞ்சலி நிகழ்சிக்கு பிறகு, சங்கத்தின் முன்னணித் தோழர்கள் அனைவரும் மராட்டிய பண்பாட்டின் படி, கௌரவிக்கப்பட்டனர்.

         தோழர். ஜெயராஜ், நம்மிடையே இருக்கும் முக்கிய பிரச்சினைகளைத் தொகுத்து, வரவேற்புரையாற்றினார். CITU சங்க முன்னணித் தோழர், பொருளாதார வல்லுனர், அஜித் அபயங்கர் ஒரு சிறந்த, சிந்தனையை தூண்டிய துவக்க உரையாற்றினார். தோழர் நம்பூதிரி, BSNLEU, BSNLCCWF மாநில செயலர்கள் வாழ்த்துரை வழங்கினர். மகாராஷ்ட்ரா மாநிலச் செயலர் M. I. ஜகாதி நன்றி நவில, பொது அமர்வு முடிவுக்கு வந்தது.

     பொருளாய்வுக் குழு, பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. செயல்பாட்டு அறிக்கையை பொதுச்செயலர் சமர்ப்பித்தார். நிதி நிலை அறிக்கை, தோழர். MGS குருப், நிதிச் செயலரால் வாசிக்கப்பட்டது.

   விவாதத்திற்கான முக்கிய கருத்துக்கள், முன் செல்வதற்கு சங்கம் மேற்கொள்ள வேண்டிய குறிக்கோள்கள், சந்திக்கும் இடர்பாடுகள் பற்றி பொதுச்செயலர் விரிவாக எடுத்துரைத்தார்.

தீர்மானங்களுக்கான கமிட்டி தோழர். மோகன்தாஸ் அவர்களைக் கன்வீனராகவும், தோழர்கள் A. துபால், தோழர். முத்தய்யா இருவரையும் உறுப்பினராகவும் கொண்டு அமைக்கப்பட்ட பின், அன்றைய அமர்வு முடிவுக்கு வந்தது.

20.11.23 இரண்டாம் நாள் விவாதம்..

              செயற்குழுவின் பொருளாய்வுக்குழு அமர்வில் 28 தோழர்கள் அறிக்கை, அமைப்புநிலை மற்றும் முக்கியமான பிரச்சினைகள் குறித்த விவாதத்தில் பங்கேற்றனர்.

  



    நமது மாநில சங்கத்திலிருந்து மாநிலச் செயலாளர் தோழர். R.ராஜசேகர், மத்திய சங்க துணை தலைவர் தோழர் எஸ் மோகன் தாஸ், மத்திய சங்க துணை பொருளாளர் தோழர் வி சீதாலட்சுமி, மத்திய சங்க அமைப்பு செயலாளர் தோழர்.வி. வெங்கட்ராமன் ஆகியோர் விவாதத்தில் சிறப்பாக பங்கேற்றனர்.

     விவாதத்தில் பங்கேற்ற அனைவரும் ஓய்வூதியம் மாற்றம் தொடர்பாக தொடர் நடவடிக்கைகளில் மத்திய சங்கம் அறைகூவல் விட வேண்டும் என்கின்ற கருத்தை வலியுறுத்தி பேசினர்.

விவாதங்களுக்கு பதிலளித்து தொகுப்புரை வழங்கிய பொதுச்செயலாளர் தோழர். கே. ஜி. ஜெயராஜ் ஓய்வூதிய மாற்றம் குறித்த நடவடிக்கைகளை விளக்கினார்.

செப்டம்பர் 20, 2023 அன்று டெல்லி PBCAT வழங்கிய தீர்ப்பு மற்றும் அதன் தொடர்ச்சியான தாக்கங்களை விளக்கினார்.

அரசும், DOT அதிகாரவர்க்கமும் வழக்கு மற்றும் தீர்ப்பின் பின்னணியில் ஏற்கனவே தாமதமாகி வரும் ஓய்வூதிய மாற்றத்தை மேலும் தாமதிப்பது உறுதி. எனவே நாம் நமது போராட்டத்தை தொடர்வது அவசியமானது.
முதல் கட்டமாக, பென்சன் மாற்றப் பிரச்னையின் நிலைமை குறித்து *நாடு முழுவதும் அனைத்து மட்டங்களிலும் 2023 டிசம்பர் 1 முதல் 10 வரை விரிவான பிரச்சாரத்தை மேற்கொள்வதென CEC முடிவு செய்தது*.

மற்ற பிரச்சினைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.

1. 30-08-2022 தேதியிட்ட கார்ப்பரேட் அலுவலக உத்தரவின்படி BSNL ஊழியர்களுக்கு பட்டுவாடா செய்யப்படும் போதே ஓய்வூதியர்களுக்கும் மருத்துவப் பலன்களை சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதிசெய்யவும்.

2.CGHS பயனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தணிக்க அரசு மற்றும் CGHS அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.மகாராஷ்டிராவின் VRS ST ஓய்வூதியதாரர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய பலன்கள் மற்றும் முழுமையான மாத ஓய்வூதியத்திற்கு உடனடியான தீர்வு தேவை.

*4. 2023 நவம்பர் 28 அன்று Joint Forum of BSNL Unions சார்பில் ஊதிய மாற்றம் மற்றும் BSNLக்கு 4G/5G சேவை வழங்கிடக்கோரி நடைபெறும் மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு நமது முழு ஆதரவையும்* நல்கிட வேண்டும்.

உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவும், *குறைந்தபட்சம் 20 சதவீத உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், டெலி பென்ஷனர் இதழுக்கான 20 சதவீதம் கூடுதல் சந்தாதாரர்களைச்* சேர்க்கவும் மாவட்ட/ மாநிலச்சங்களுக்கு CEC அறைகூவல் விடுத்துள்ளது.

மத்திய சங்க நிர்வாகிகளுக்கு மாநில பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. *நமது மாநிலத்திற்கு மத்திய சங்க அமைப்பு செயலாளர் தோழர் V.வெங்கட்ராமன் அவர்களும், மத்திய சங்க துணை பொருளாளர் தோழியர் V.சீதாலட்சுமி அவர்களும் பொறுப்பாளர்கள்*.

இறுதியில் AICGPA (HQ-Pune) அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர்.H.F.சௌதாரி CEC யில் வாழ்த்துரை வழங்கினார்.

மத்திய சங்க துணைப் பொதுச் செயலாளர் தோழர் கே. கோவிந்தராஜ் நன்றி உரை வழங்கினார்.

மத்திய செயற்குழு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ததற்காக வரவேற்புக் குழுவிற்கு CEC சார்பில் வாழ்த்துகளும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

தோழமையுடன்,
R.ராஜசேகர்
மாநில செயலர்
21.11.23

Post a Comment

0 Comments