Latest

10/recent/ticker-posts

28-10-2023ல் நடைபெற்ற AIBDPA தமிழ் மாநில மையக்கூட்டம்.

28-10-2023ல் நடைபெற்ற AIBDPA தமிழ் மாநில மையக்கூட்டம்.

தோழர்களே ! வணக்கம்.
           28-10-2023அன்று நமது AIBDPA தமிழ் மாநிலச் சங்கத்தின் மாநில மையக்கூட்டம் On line மூலமாக நடைபெற்றது.

        தோழர்களே, மையக் கூட்டம் முடிவுகளை தயார் செய்து வெளியிடுவதற்குள் ஒரு சில நிகழ்வுகள் நடந்த காரணத்தினால் இதனை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த காலதாமதத்திற்கு வருந்துகிறோம்.

  கூட்டத்தில் தோழர்கள் சி.கே. நரசிம்மன் மாநில தலைவர், ஆர். ராஜசேகர் மாநில செயலாளர், எஸ்.நடராஜா மாநில பொருளாளர், பி. மாணிக்கமூர்த்தி மாநில துணைத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விபரம்:

மதுரை மாவட்ட ஸ்தாபன பிரச்சினை

1) மதுரை மாவட்ட ஸ்தான பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

அ) முதலில் மதுரை மாவட்டத்ழில் உள்ள கீழ்க்கண்ட மாநில நிர்வாகிகள் தோழர். எஸ். ஜான்போர்ஜியோ, மாநில துணைச் செயலாளர் தோழர். ஜி. சுந்தரராஜன், மாநில அமைப்புச் செயலாளர் தோழர். எம். செல்வராஜன், மாநில சிறப்பு அழைப்பாளர் ஆகியோர் மதுரை மாவட்ட ஸ்தாபன பிரச்சினைகள் (தேனி கிளை தோழர்களோடு) குறித்து தலையிட்டு பேசுவது என்றும் .

ஆ) அவர்கள் பேசிய பின்னர் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மாநில மையம் உடனடியாக கூடி முடிவுகள் எடுத்து மதுரை மாவட்ட சங்கத்தின் ஸ்தாபன பிரச்சினை தீர்வு குறித்து வழிகாட்டும்.

2) மெடிக்கல் பிரச்சினை குறித்து

அ) 18-10-2023 அன்றைய மெடிக்கல் பிரச்சினைகள் தீர்வுக்காக நடத்தப்பட்ட அதாலத் கூட்டத்திற்கு பின்னர் இன்னும் பிரச்சினைகள் தீர்வில் தடங்கல்,தாமதம் உள்ளது.

      எனவே தலைமை பொதுமேலாளர் அவர்களை இதற்காக பிரத்தியேகமாக சந்தித்து மீண்டும் மெடிக்கல் பிரச்சினைகள் தீர்வுக்காக தனியாக விவாதித்து கூட்டம் நடத்த வழியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

3) NCCPA சென்னை அகில இந்திய மாநாடு

      நமது AIBDPA சங்கம் அங்கமாக உள்ள NCCPA அமைப்பின் அகில இந்திய மாநாடு 2023 டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது என்பதை அறிவீர்கள்.

     அதற்கான 30 பேர்கள் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

     16-09-2023 அன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்ட முடிவின் அடிப்படையில் மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கோட்டாவினை 31-10-2023 முடித்து அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி சில மாவட்டங்கள் நிதி அனுப்பி வைத்துள்ளன. அதனை 31-10-2023க்குள் முடித்து கொடுக்க முயற்சிகள் செய்ய வேண்டும். அதிக பட்சமாக வரும் 10-11-2023க்குள் முழுமையாக முடித்து மாநில சங்கத்திற்கு நன்கொடைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மாவட்ட செயலாளர்கள் மாநிலச் சங்க நிர்வாகிகள் இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

4) கிளை மாநாடுகள் 
     மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கிளை மாநாடுகள் சிறப்பாக நடந்து வருவது பாராட்டுக்குரியது என்று மாநில சங்கம் கருதுகிறது. சில மாவட்டங்கள் கிளை மாநாடுகளை நடத்தி முடித்துள்ளது சிறப்பானது. இதுவரை கிளை மாநாடுகளை நடத்தாத மாவட்டங்கள் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் கிளை மாநாடுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். கண்டிப்பாக 31-12-2023க்குள் அனைத்து கிளை மாநாடுகளையும் மாவட்டங்களில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தோழர்களே !

முடிவுகளை விரைந்து அமுல் படுத்துவோம் !!

மேலும் முன்னேறுவோம் !!!

தோழமையுடன்,
ஆர்.ராஜசேகர் ,
மாநில செயலாளர்,
AIBDPA ,
தமிழ் மாநிலம்.
30-10-2023

Post a Comment

0 Comments