Latest

10/recent/ticker-posts

7.11.2023ல் நடைபெற்ற AIBDPA சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம்

AIBDPA சேலம் மாவட்ட செயற்குழு கூட்டர் -7.11.2023ல்

   





                AIBDPA சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம் 7.11.2023 ரஷ்யப் புரட்சி தினத்தன்று BSNLEU அலுவலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. தோழர். M. மதியழகன் DP அவர்கள் தலைமை தாங்கினார். தோழர். P. சம்பத் BS MEY அஞ்சலி உரை நிகழ்த்தினார். தோழர் D. சுப்ரமணி BS மெயின் வரவேற்புரை ஆற்றினார்.

        மாநில உதவிச் செயலாளர் தோழர் T.பழனி துவக்க உரைக்குப் பின் மாவட்டச் செயலர் அஜண்டாவினை அறிமுகப்படுத்திப் பேசினார். கிளைச் செயளர்களின் விவாதம் சிறப்பாக நடந்தது. BSNLEU DS தோழர் E.கோபால் , TNTCWU DP தோழர் K. ராஜன், மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் P.ராமசாமி, AIBDPA DVP தோழர் B.சுதாகரன் , DT தோழர் மைக்கேல் ஆண்டனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

           சேலம் மெயின் கிளையில் ஏற்காடு தோழர் இளங்கோ அவர்களும், மெய்யனூர் கிளையில் தோழியர் பங்கஜம் நாச்சியப்பன் அவர்களும், நாமக்கல் கிளையில் தோழியர் மணிமேகலை அவர்களும் ஆயுள் சந்தா அளித்து AIBDPA வில் புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட செயற்குழு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டது.

              விவாதத்தின் மீதான தொகுப்பு உரைக்குப் பின் கீழ்க்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

1) சேலம் மெயின், மெய்யனூர் கிளை மாநாடுகளை இணைந்த மாநாடாக நடத்துவது. மாவட்ட சங்கம் அதற்கு உதவுவது. ஆத்தூர், ஓமலூர் கிளைகளின் கிளை மாநாடுகளை சிறப்பாக நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்வது. தீபாவளி முடிந்த உடன் தேதிகளை முடிவு செய்வது.

2) NCCPA அனைத்திந்திய மாநாட்டிற்கு (டிச 13, 14 சென்னை) நிதிக் கோட்டா வழங்குவது.

3) AIBDPA மாவட்ட மாநாட்டினை கம்பீரமாக சேலத்தில் ஜனவரி 2024 ல் நடத்துவது.

4) AIBDPA மாவட்ட மாநாடு, NCCPA அகில இந்திய மாநாடு இரண்டிற்கும் சேர்த்து உறுப்பினர்களிடம் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயையும், BSs, DOBs, முன்னணி தோழர்கள் மத்தியில் ₹2000/- என்ற வகையிலும் நன்கொடை வசூல் செய்வது. மாநாடு சிறப்புற நடத்திட நிதி வசூலில் அனைவரும் பங்கேற்பது.

5) Life Certificate கொடுப்பதில் ஓய்வூதியர்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு BSs, DOBs உதவுவது வழிகாட்டுவது.

6) மெடிக்கல் பிரச்சினைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி பெற்றுத் தருவது. தீபாவளிக்கு பின்னர் அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது.

     முடிவுகளை முழுமையாக நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு நல்குவது என்ற உறுதியுடன் தோழர். M. கௌசல்யன் BS ஓமலூர் அவர்கள் நன்றி கூற செயற்குழு நிறைவுற்றது.

வாழ்த்துக்களுடன்

S. தமிழ்மணி மாவட்டச் செயலர்
AIBDPA சேலம்.

Post a Comment

0 Comments