Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்டம் பீளமேடு மற்றும் ஒண்டிப்புதூர் கிளை மாநாடுகள் .

கோவை மாவட்டம் பீளமேடு மற்றும் ஒண்டிப்புதூர் கிளை மாநாடுகள் .

 




   

        இனிதாக நடந்து முடிந்த (25.11.2023) கோவை மாவட்டத்தின் இணைந்து நடத்திய பீளமேடு மற்றும் ஒண்டிப்புதூர் கிளை மாநாடுகள். காலை 1030 மணி அளவில் பீளமேடு கிளை தலைவர் தோழர். V. சம்பத் அவர்கள் தலைமையில் ஒண்டிப்புதூர் கிளை தலைவர் தோழர். M. ஈஸ்வரன் சங்கக் கொடியேற்றினார். தொடர்ந்து இரண்டு தலைவர்களின் கூட்டுத் தலைமையில் பொதுக்குழு துவங்கியது. தலைமை உரைக்கு பின் இரு கிளைகளின் சார்பில் தோழர். செல்வராஜ் (K.G.போஸ் நகர்) அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார்.

         பிறகு மாவட்ட செயலாளர் தோழர் குடியரசு மாநாட்டைத் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். இன்றைய காலகட்டத்தில் அகில இந்திய சங்க செயல்பாடு, மாநில சங்க செயல்பாடு, மாவட்ட சங்க செயல்பாடு பற்றி ஒரு விளக்கத்தை கொடுத்தார். தொடர்ந்து தோழர். S. மகேஸ்வரன் BSNLEU D.S வாழ்த்துரை வழங்கினார்.

       CHQ OS தோழர். V. வெங்கட்ராமன் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த அகில இந்திய செயற்குழு பற்றி விவரங்களை எடுத்துரைத்தார். இரு கிளைகளின் ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு பொதுக்குழுவின் ஆய்வுக்கு விடப்பட்டது. இரண்டு கிளைகளின் சார்பாகவும் அதை ஏகமானதாக ஏற்றுக் கொண்டனர்.

       அடுத்து நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. பீளமேடு நிர்வாகிகளாக தோழர்கள் V. சம்பத் தலைவராகவும் செயலாளராக தோழர் M.ஜான்ரோஸ், பொருளாளராக தோழர். சதாசிவன், ஒண்டிப்புதூர் கிளை நிர்வாகிகளாக தலைவர் தோழர் V. செல்வராஜ், செயலாளராக தோழர். K. கிருஷ்ணகுமார் பொருளாளராக தோழர். பாலசுப்ரமணியம் SDE RTD ஆகியோர் ஏக மனதாக முக்கிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

           தொடர்ந்து வந்திருந்த தலைவர்களுக்கு துண்டு அணிவித்து கௌரவித்தனர். அடுத்து தோழர் B.நிசார் அஹமது AIT. வாழ்த்துரை மற்றும் தோழர் T.K..பிரசன்னா C.O.S அரசியல் சம்பந்தமான மற்றும் சங்கம் சம்பந்தமான செய்திகளை கொடுத்து நிறைவுரையாற்றினார். புதிய கிளைச் செயலாளர் தோழர் ஜான்ரோஸ் இரு கிளைகளின் சார்பாக நன்றி தெரிவித்து கூட்டத்தை முடித்து வைத்தார்.

புதியதாக தேர்வு செய்யப்பட்ட இணைந்த கிளைகளின் நிர்வாகிகளுக்கு மாநில மாவட்ட சங்கங்களின் சார்பாக புரட்சி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்.

Post a Comment

0 Comments