Latest

10/recent/ticker-posts

கும்பகோணம் மாவட்டம் கும்பக்கோணம் கிளை மாநாடு

சிறப்பாக நடைபெற்ற கும்பகோணம் கிளை மாநாடு

  




தோழர்களே !

              AIBDPA கும்பகோணம் பகுதி 2வது கிளை மாநாடு 28/11/23 அன்று தோழர். ஏ. சிவக்குமார் தலைமையில் துவங்கியது. அஞ்சலி உரையை தோழர். எல் . சகாயராஜ் நிகழ்த்தினர். மாவட்ட செயலாளர் தோழர். கே. மணிவண்ணன் மாநாட்டை துவக்கி வைத்து உறையாற்றினார்.

      கிளை செயலாளர் தோழர் வி . முத்துசாமி செயல்அறிக்கையையும், நிதி அறிக்கையை தோழர். ஆர். மனேகரனும் முன்வைத்தனர். விவாதத்தில் 2 தோழர்கள் கலந்துக் கொண்டனர். கிளை செயலாளர் தொகுப்பு உரைக்கு பின் ஏற்றுக் கொள்ளப்பட்டது .

        வாழ்த்துரையில் தோழர்கள் பி . செல்வராஜ், மு . குருசாமி, ரா . பக்கிரிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். சங்கத்தில் புதியதாக இணைந்த தோழர்கள் பட்டுசாமி, ராமமூர்த்தி ஆகியோருக்கு கதராடை அணிவித்து கெளரவிக்கப்பட்டார்கள். அவர்கள் சங்கத்தில் இணைந்தத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

        புதிய நிர்வாகிகள் தேர்வை மாவட்ட செயலாளர் நடத்தினார் .
தலைவர் : ஏ . சிவக்குமார்
து . தலைவர் : எஸ் . வெங்கடேசன்
செயலாளர் : வி . முத்துசாமி
உ.செயலாளார் : வி . காமராஜ்
பொருளாளர் : ஆர் மனேகரன்
அமைப்புச் செயலாளார்கள் :
எம் . ராஜா
ஜே . கண்ணன்
வி .பத்மாவதி
வி . சரோஜா
தணிக்கையாளர் : எல் . சகாயராஜ் .
புதிய பொருளாளர் நன்றி கூற மாநாடு நிறைவுற்றது .

Post a Comment

0 Comments