Latest

10/recent/ticker-posts

CGM தமிழ்நாடு திரு.D. தமிழ்மணி அவர்களுடன் மாநிலச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு*

CGM தமிழ்நாடு திரு.D. தமிழ்மணி அவர்களுடன் மாநிலச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

தோழர்களே,
        16.11.2023 அன்று தமிழ்நாடு CGM திரு. D. தமிழ்மணி அவர்களுடன் மாநிலச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

               மாநில சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் தோழர். சி. கே நரசிம்மன், மாநில செயலாளர் தோழர். ஆர். ராஜசேகர், மாநில துணைத்தலைவர் தோழர். P. மாணிக்கமூர்த்தி, சென்னை மாவட்ட துணைச் செயலாளர் தோழர். A. சுப்பிரமணியம் ஆகியோர் சந்தித்தனர்.

         சந்திப்பில் பென்ஷன்/குடும்ப ஓய்வூதியர் கடிதங்கள் CCA-DOT அலுவலகத்திற்கு அனுப்புவதில் உள்ள பல பிரச்சினைகளையும், BSNL MRS மெடிக்கல் சம்பந்தமான பிரச்சனைகளையும் விவாதித்தோம். 45 நிமிடம் நடைபெற்ற அந்த விவாதம் ஒரு பயனுள்ளதாக இருந்தது.

1) பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து CCA-DOTக்கு பென்ஷன் சம்பந்தமான கடிதங்கள் அனுப்பப்படும் பொழுது அதில் முறையாக அனைத்து படிவங்களும் அனைத்து ஆவணங்களும் CCA அலுவலக Check list படி வைத்து அனுப்பப்பட வேண்டும். இது பென்ஷன் பிரச்சனையில் ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் என்பதனை குறிப்பிட்டு வலியுறுத்தினோம். CGM அவர்களும் நமது பிரச்சனையின் தன்மையை புரிந்து கொண்டு உடனடியாக DGM (A&HR) அவர்களை அழைத்து CCA அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு அவர்களிடம் செக் லிஸ்ட், படிவங்கள் அனைத்தையும் வாங்கி மாவட்டங்களுக்கு அனுப்ப வலியுறுத்தி உள்ளார். இது வருங்காலத்தில் பென்ஷன் பிரச்சனையில் ஏற்படும் காலதாமதத்தை குறைப்பதற்கு கூடுதலாக உதவும் என்று எதிர்பார்க்கிறோம்.

2) ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மெடிக்கல் அதாலத் சம்பந்தமாக விவாதித்தோம்.
        அந்த மெடிக்கல் அதாலத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள், கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் இவை எல்லாம் 15.9.23 க்குள் தீர்க்கப்பட வேண்டும் என்கின்ற முடிவு Minutesல் இருந்தது. ஆனால் அவற்றில் போதிய முன்னேற்றம் இல்லை என்பதனையும் சில மாவட்டங்கள் இந்த பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தவில்லை என்பதையும் நிர்வாகத்திடம் சுட்டிக் காட்டினோம். CGM அவர்களும் புரிந்து கொண்டு எந்த இடத்தில் பிரச்சனை இருக்கிறதோ அது சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

         (நம்முடைய மத்திய பொதுச் செயலாளர் BSNL நிர்வாகத்திடம் பேசி மூன்று மாதத்திற்கு ஒரு முறை மெடிக்கல் பில்கள் பட்டுவாடா செய்யப்படும் என்றும் வரும் டிசம்பர் மாதத்தில் நிலுவையில் உள்ள அத்தனை பில்களும் பட்டுவாடா செய்யப்பட்டு விடும் என்றும் உறுதி அளித்ததை குறிப்பிட்டு இருக்கின்றார்.

     இதனை CGMடம் குறிப்பிட்டோம். எனவே மாவட்டங்களில் உள்ள பில்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு ERPயில் UPLOAD செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் டிசம்பர் மாதம் Payment முழுமையானதாக இருக்கும் என்பதனை வலியுறுத்தி இருக்கிறோம். இதனையும் CGM அமுல் படுத்துவதற்கு உறுதியளித்து உள்ளார்.

3) மாவட்டம் தோறும் ஓய்வூதியர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நோடல் ஆபீசர் போடப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தியுள்ளோம். இது உடனடியாக செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

4) குடும்ப ஓய்வூதியர்களுக்கு மெடிக்கல் ஆப்ஷன் மாறுவதற்கான உத்தரவு திருச்சி மாவட்டத்தில் அமுலாகாததை குறிப்பிட்டிருக்கிறோம். அது சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

5) வங்கி பிரச்சனையின் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ள மெடிக்கல் தொகை மீண்டும் ஓய்வூதியருக்கு செல்வதில் உள்ள பிரச்சனைகளை, குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் தோழர். A. அண்ணாமலை அவர்களின் பிரச்சனை நீண்ட காலமாக உள்ளதையும் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு உறுதி அளித்துள்ளார்.

6) மெடிக்கல் அலவன்ஸ் பிரச்சனையில் ஆண்டு நடுவில் ஓய்வு பெறுபவர்களுக்கு அந்த ஆண்டுக்கான FMA தரப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டி அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினோம். அதனையும் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.

7) காணாமல் போன பில்களுக்கு ஜெராக்ஸ் காப்பி கொடுத்து பில் பிராசஸ் பண்ணுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளோம்.

8) கடலூர் மாவட்டத்தில் கண் சிகிச்சை (Cataract) பிரச்சனையில் FMAல் உள்ளவர்களுக்கு outdoor treatment ஆக பார்ப்பதில் உள்ள பிரச்சனையை சொல்லி அது தீர்க்கப்படுவதற்கு நடவடிக்கை வேண்டும் என்பதனை வலியுறுத்தி உள்ளோம். அவரும் அதனை ஆலோசிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

9) மேலும் மெடிக்கல் பில்கள் சம்பந்தமாக அதாலத்துக்கு பிறகு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை நிர்வாக தரப்பில் விவாதித்து விட்டு பிறகு நம்மோடும் விவாதிப்பதாக CGM அவர்கள் உறுதியளித்துள்ளார்.

10) தோழர்களே, மாவட்டங்களில் நம்முடைய தோழர்கள் இந்த மெடிக்கல் பில் பிரச்சனைகள் தலமட்ட நிர்வாகத்தோடு தொடர்ந்து தலையிட வேண்டும். டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் மெடிக்கல் பில்கள் ERPயில் UPLOAD செய்வதற்கான உத்திரவாதத்தை நாம் எடுத்தாக வேண்டும். ஆகவே இதை ஒரு அவசர பணியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

11) இறுதியாக தஞ்சை மாவட்டம் தோழர். R.ரமணன் அவர்களுடைய PAY FIXATION பிரச்சனையையும், இதற்காக CGM நிர்வாகம் BSNL CORP அலுவலகத்திற்கு கடிதம் எழுதி, நீண்ட நாட்களாக பதில் வராததையும் சுட்டிக்காட்டினோம்.
     அந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். நடவடிக்கை எடுப்பதாக CGM உறுதி அளித்துள்ளார்.

தோழர்களே !!
        16.11.23ல் நடைபெற்ற கூட்டம் ஒரு பயனுள்ள முறையில் நடைபெற்று முடிந்திருக்கிறது. CGM திரு. D. தமிழ்மணி அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தோழமையுடன்
ஆர் ராஜசேகர்
மாநில செயலாளர்
17.11.23

Post a Comment

0 Comments