Latest

10/recent/ticker-posts

Jt.CCA திருமதி.கௌதமி அவர்களுடன் மாநில செயலர் R.ராஜசேகர் சந்திப்பின் கூடுதல் தகவல்கள்

Jt.CCA திருமதி.கௌதமி அவர்களுடன் மாநில செயலர் R.ராஜசேகர் சந்திப்பின் கூடுதல் தகவல்கள்

தோழர்களே !
              இன்று 30.11.2023 அன்று Jt.CCA திருமதி கௌதமி அவர்களை சந்தித்தோம். அப்பொழுது Dy.CCA திருமதி எஸ்தர் அவர்களும் AO திருமதி ஜெகதீஸ்வரி அவர்களும் உடன் இருந்தனர்.

சந்திப்பின் போது பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்கள்.

1) வங்கி, போஸ்டல் Migration பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. 53,000க்கும் கூடுதலான ஓய்வூதியர்கள் Sampamn பென்ஷனர்களாக மாறிவிட்டனர்.

2) அஞ்சல் மைகிரேஷன் முழுமையாக முடிந்துள்ளது.

3) வங்கி மைகிரேஷனில் ஒரு சில பிரத்தியேக காரணங்களால் சிலர் விடுபட்டுப் போய் உள்ளனர். அவற்றையும் வங்கியிடம் இருந்து clearance சர்டிபிகேட் பெறப்பட்டு migrate பண்ணுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

4) போஸ்டல் மைகிரேஷனுக்கு பிறகு சுமார் 560 ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் குறைவாக பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சனை அஞ்சல் பகுதியிலிருந்து due drawn சர்டிபிகேட் தவறாக வந்ததின் விளைவாக உள்ளது. இந்த பிரச்சனை ஒரு மாதத்திற்குள் சரி செய்யப்பட்டு விடும்.

4) லைப் சர்டிபிகேட் மேளா
அக்டோபர் 31ஆம் தேதி வாழ்வு சான்றிதழ் கொடுக்க வேண்டியவர்கள் மீதமுள்ளது சுமார் 3600. நவம்பர் 30ம் தேதி சுமார் 2900. ஆக 6500 ஓய்வூதியர்கள் வாழ்வு சான்றிதழ் உடனடியாக கொடுக்க வேண்டும்.

ஆகவே இந்த பணியினை துரிதமாக செய்வதற்கு CCA அலுவலகம் மாவட்டங்களில் மேளாக்கள் நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

டிச 6-ம் தேதி முதல் இந்த மேளாக்கள் துவங்கலாம்.

CCA நிர்வாகம் சங்கங்களிடம் ஒத்துழைப்பு கேட்டு உள்ளார்கள்.

நாமும் உறுதியளித்துள்ளோம்.

மாவட்டங்களில் மேளாக்கள் நடக்கும் பொழுது நம்முடைய தோழர்கள் CCA நிர்வாகத்தோடு சேர்ந்து இதனை செய்து முடிக்க வேண்டுகிறோம்.

தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர் .ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
30. 11. 23

Post a Comment

0 Comments