Latest

10/recent/ticker-posts

NCCPA AIC RC MEETING & LOGOவெளியிட்டு விழா

NCCPA அகில இந்திய மாநாடு வரவேற்பு குழு கூட்டமும் மாநாட்டு இலட்சினை(LOGO) வெளியிட்டு விழாவும்

 


தோழர்களே !
              NCCPA ஐந்தாவது அகில இந்திய மாநாடு டிசம்பர் 13 14 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதனை பரிசீலனை செய்வதற்காக வரவேற்பு குழு கூட்டம் நடைபெற்றது. தோழர். கே. ராகவேந்திரன் NCCPA மா பொதுச் செயலாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
            கூட்டத்தில், நடைபெற்ற வேலைகளை வரவேற்பு குழு பொதுச் செயலாளர் தோழர் P.மோகன் விளக்கினார். மாநில செயலாளர் R. ராஜசேகர், தோழர் K. கோவிந்தராஜ் சென்னை தொலைபேசி AIBDPA, தோழர்.முருகேசன் DRPU ஆகியோர் கருத்துக்களை வழங்கினார்கள்.

          மாநாட்டு செலவுகள் திட்டமிட்டதை விட அதிகமாக சென்று கொண்டிருக்கின்ற காரணத்தால், ஒவ்வொரு மாநிலச் சங்கமும் முன்பு ஏற்றுக்கொண்ட நிதியிலிருந்து கூடுதலாக 25 சதவிகிதம் கொடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

             அதன் அடிப்படையில் நமது மாநில சங்கம் இரண்டு லட்ச ரூபாயிலிருந்து, 2 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்க வேண்டும். இந்த கூட்டத்தில் நமது மாநில சங்கத்தின் சார்பில் *மாநிலச் செயலாளர் ராஜசேகர் துணைத்தலைவர் தோழர் P.மாணிக்க மூர்த்தி, சென்னை மாவட்ட செயலாளர் தோழர்.T.கோதண்டம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.



  

         கூட்டத்தின் இறுதியில் ஐந்தாவது அகில இந்திய மாநாட்டுக்கான இலட்சியினை (LOGO) வெளியிடப்பட்டது. மாநாட்டு பணிகளைஆய்வு செய்து கடந்த மாநாடுகளில் இருந்து இந்த மாநாடு வித்தியாசமாக நடைபெறும் என்கின்ற வாழ்த்துக்களோடு தோழர். K.ராகவேந்திரன் SG NCCPA அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டம் தோழர் சேகர் அகில இந்திய பொருளாளர் AIPRPA அவருடைய நன்றியுடன் முடிவுற்றது.

தோழர்களே,
       நமது மாநிலச் சங்கம் கூடுதலாக 50,000 இந்த மாநாட்டிற்காக ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆகவே மாவட்டங்கள் இதற்கு முன்பாக தாங்கள் ஏற்றுக்கொண்ட தொகையிலிருந்து கூடுதலாக தர வேண்டியிருக்கும். முதல் கட்டமாக நீங்கள் ஏற்றுக் கொண்ட தொகையினை உடனடியாக மாநில சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
பிறகு கூடுதல் தொகையை மையம் கூடி முடிவெடுத்து அறிவிக்கும்.

தோழமை வாழ்த்துக்களுடன்
*ஆர் ராஜசேகர்*
*மாநிலச் செயலாளர்
7.11.23

NCCPA 5th AIC Logo released!

              In a special meeting organized by the Reception Committee of NCCPA 5th AIC today at Flower Bazar Exchange BSNLEU office, Chennai the LOGO of AIC was released by Com. K Ragavendran SG NCCPA. The Reception Committee meeting was presided by comrade K.Govindaraj CS AIBDPA Chennai TD and anchored by the Reception Committee GS comrade P.Mohan. comrade Mohan explained the details of arrangements so far made for the conduct of the AIC and accommodating delegates. He also explained the donations so far received from affiliates and the need to increase the quota determined for all affiliates. A vivid discussion to make the Conference a memorable one was followed and all Chief executives of State Associations including Comrades Rajasekar CS AIBDPA, Tamil Nadu ; Murugesan DRPU attending the meeting spoke on the occasion.

             Com. K Ragavendran SG NCCPA spoke on the importance of the NCCPA conference and hosting in Chennai. All are requested to popularise the Logo of the 5th AIC -

K G Jayaraj
General Secretary

Post a Comment

0 Comments