Latest

10/recent/ticker-posts

NCCPA அகில இந்திய மாநாட்டு பணிகள் - நன்கொடை வரவு விபரம் 

NCCPA அகில இந்திய மாநாடு பணிகள் - இதுவரை வந்த நன்கொடை வரவு விபரம் 

தோழர்களை !!
               NCCPA அகில இந்திய மாநாடு 2023 டிசம்பர் மாதம் 13,14 தேதிகளில் சென்னையில் நடைபெற இருப்பது அனைவரும் அறிந்ததே. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 31-10-23 & 3-11-23 அன்று அதற்கான கமிட்டி கூடி பணிகளை பரிசீலித்தோம். மண்டபம், சமையல், தங்குமிடம், மண்டப அலங்காரம் இவை அத்தனையும் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. சார்பாளர்களுக்கான பை, பேட்ஜ், பைல் கவர், பேனா போன்றவையும் இறுதி நிலையில் உள்ளது.

       இந்த கூட்டத்தில் கூட்டங்களில் மாநிலச் செயலாளர் ராஜசேகர் அவர்களும் துணைத் தலைவர் தோழர் மாணிக்கமூர்த்தி அவர்களும் நமது மாநில சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டிருக்கிறோம்.

பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

       ஆனால் நிதி வரவு என்பது குறைவாக இருக்கிறது. நமது மாநில சங்கத்தின் சார்பில் 2 லட்ச ரூபாய் நாம் கொடுக்க வேண்டும். நாம் இரண்டு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு மாவட்டங்கள் இலக்கு தீர்மானித்து இருக்கிறோம். இதுவரை நமக்கு  98 ஆயிரம் ரூபாய் மாநில பொருளாளரிடம் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.

           திருச்சி, கும்பகோணம், பாண்டிச்சேரி, சென்னை, தஞ்சை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மட்டும்தான் தீர்மானிக்கப்பட்ட இலக்கை கொடுத்திருக்கிறார்கள்.

     பல மாவட்டங்கள் முன்பணம் மட்டுமே கொடுத்துள்ளார்கள். சில மாவட்டங்கள் இன்னும் ஏதும் தரவில்லை.

தோழர்களே, இதுவரை வந்திருக்கும் நிதி விவரம்.

கோயம்புத்தூர் ரூ.15000

வேலூர் ரூ.13000

விருதுநகர் ரூ.10000

திருச்சி ரூ.10000

பாண்டிச்சேரி ரூ.10000

மதுரை ரூ.5000

கும்பகோணம் ரூ.5000

கடலூர் ரூ.5000

சென்னை ரூ.5000

தர்மபுரி ரூ.2500

தஞ்சாவூர் ரூ.2500

தூத்துக்குடி ரூ.15000

இந்த வரவு மட்டும் தான் வந்திருக்கிறது. நாம் 31.10.23 முன்தவணையும் 10.11.23 அன்று இறுதி கட்டமாக தேதியும் தீர்மானித்து இருக்கிறோம்.

தோழர்களே,
    இந்த நன்கொடை வசூலை நாம் இழுத்துக் கொண்டே செல்ல முடியாது. ஆகவே மாவட்டங்கள் உடனடியாக நன்கொடை வசூலை முடித்து மாநில பொருளாளரிடம் சேர்க்க வேண்டிகிறோம். மாநாடு சிறப்பாக நடப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பும் தேவை.

தோழமையுடன் *R.ராஜசேகர்*
*மாநிலச் செயலாளர்*
4.10.23

Post a Comment

0 Comments