Latest

10/recent/ticker-posts

குறுகிய கால அவகாசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற (on-line) தமிழ் மாநில செயற்குழு கூட்டம் !!

குறுகிய கால அவகாசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற AIBDPA (on-line) தமிழ் மாநில செயற்குழு கூட்டம்

தோழர்களே !!

           நமது தமிழ் மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம் Google meet செயலி மூலம் ஆன்லைன் கூட்டமாக 24-11-2023 அன்று நடைபெற்றது. இந்த மாநில செயற்குழு கூட்டத்தை நமது மாநிலத் தலைவர் தோழர். C.K. நரசிம்மன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மேற்கண்ட கூட்டத்தில் 15 மாவட்ட செயலாளர்கள், 18 மாநில நிர்வாகிகள், நான்கு சிறப்பு அழைப்பாளர்கள் ஒரு தணிக்கையாளர் என 38 தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

          மத்திய சங்கத்தின் சார்பாக துணைத்தலைவர் தோழர் S. மோகன் தாஸ், மத்திய சங்க துணைப் பொருளாளர் தோழியர் V.சீதாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர் எஸ். மோகன்தாஸ் விவாதத்தில் கலந்துகொண்டு மத்திய சங்கத்தின் நிலைபாடுகளை விவரித்தார்.

         பொதுச்செயலாளர் தோழர் கே.ஜி. ஜெயராஜ் கலந்து கொள்வதாக அறிவித்திருந்தாலும் கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.

        மூன்று மணி நேரம் நடைபெற்ற ஆன்லைன் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகள்.

1) 19 /20 நவம்பர் மாதம் பூனேயில் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் முடிவுகளை தமிழ் மாநிலத்தில் கறாராக அமல்படுத்துவது.

a) 2023 டிசம்பர் 1 முதல் 10 வரை நடைபெற உள்ள பென்ஷன் மாற்றம் சம்பந்தமான நமது நிலைப்பாட்டினை விவரித்து விரிவான பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் நடத்துவது.

b) உறுப்பினர் எண்ணிக்கையை அனைத்து மட்டத்திலும் 20% உயர்த்துவது,

c) டெலி பென்சனர் - மத்திய சங்கத்தின் பத்திரிகையினை கூடுதலாக 20 சதவீதம் சந்தா பிடிப்பது.

d) அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாநில சங்கத்தின் நிர்வாகிகள் அந்த மாவட்டத்தில் பிரச்சார இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும். தேவைப்படும் மாவட்டங்களுக்கு மாநிலச் சங்கம் மாநிலச் சங்க நிர்வாகிகளை அனுப்பி வைக்கும்.

2) NCCPA 5வது அகில இந்திய மாநாடு 2023 டிசம்பர் 13, 14 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. அதற்கு 14 volunteers கொடுக்க உள்ளோம். சென்னை, வேலூர், கடலூர், பாண்டி ஆகிய மாவட்ட தோழர்கள் அந்த பணியினை ஈடுபடுவார்கள்.
        மத்திய சங்கம் நமக்கு ஒதுக்கியுள்ள நான்கு சார்பாளர்கள் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
a) ஆர். ராஜசேகர், மாநிலச் செயலாளர்
b) A. குடியரசு, கோவை மாவட்ட செயலாளர் c) P.சின்னசாமி, ஈரோடு மாவட்ட செயலாளர்
d) S. தமிழ் மணி, சேலம் மாவட்ட செயலாளர்.

நன்கொடையாக நமக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம். இதுவரை ஒரு லட்சத்து 68 ஆயிரம் பொருளாளரிடம் வந்திருக்கிறது. மீதமுள்ள தொகையினை மாவட்டங்கள் உடனடியாக சேர்ப்பிக்க வேண்டுகிறோம்.

3) மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து நடத்தும் மகாபாதவ் தார்ணா போராட்டம் சென்னையில் 2023 நவம்பர் 26/27 தேதிகளில் நடைபெறுகிறது.
   மத்திய அரசாங்கத்தின் தவறான பொருளாதார, மக்கள் விரோத - தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து நடைபெறும் இந்தப் போராட்டத்தில் நம்முடைய தோழர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

4) 2023 நவம்பர் 28 Joint Forum நடத்தக்கூடிய மனித சங்கிலி இயக்கத்தில் AIBDPA தோழர்கள் முழுமையாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும்.

5) ஈரோடு மாவட்ட செயற்குழு முடிவின் அடிப்படையில் மாவட்டங்களில் பெண்கள் கிளைகளை உருவாக்குவதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

6) சொசைட்டி வழக்கில் வழக்கறிஞர் திரு. அஜய் கோஷ் அவர்கள், விரைவில் வழக்கு பதிவாகி, நம்பர் ஆகிவிடும் என்றும் விசாரணை துவங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

7) Notional இன்கிரிமென்ட் வழக்கில் ஏப்ரல் மாதம் தரப்பட்ட தீர்ப்புக்கான தீர்ப்பின் நகல்கள் பெறுவதில் உள்ள சிக்கல் விரைவில் தீர்க்கப்பட்டு, ஈரோடு, கடலூர் மற்றும் பாண்டிச்சேரி தோழர்களுக்கான அந்த தீர்ப்பின் நகல் விரைவில் பெறப்படும் என்று அந்த வழக்குக்கான வழக்கறிஞர் தோழர் இளங்கோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

8) "வெண்மணி தினத்தை" தமிழ் மாநில மட்டத்தில் அனுசரிப்பது.

       ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கபடும் வெண்மணி தினத்தன்று மாநில சங்கத்தின் சார்பில் நமது சங்கத் தோழர்கள் வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

9) CCA அலுவலகத்தில் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதில் கடுமையான காலதாமதம் உள்ளது. மேலும் குடும்ப ஓய்வூதிய பிரச்சனைகள் தீர்க்கப்படுவதிலும், Pension sectionல் உத்தரவுகள் வழங்கப்பட்ட பின் அது PDA செக்ஷனில் அமலாக்கப்படுவதிலும் மிகுந்த காலதாமதம் உள்ளது.

    அதேபோல் வாழ்வு சான்றிதழ் Update பண்ணப்படுவதிலும் பிறகு பென்ஷன் வாங்குவது நிலுவைத் தொகை பெறுவது இவை அனைத்தும் தொடர்ந்து பிரச்சினையாகவே இருக்கிறது.

  CCA அலுவலக வழங்கியுள்ள GRIVENCE தொலைபேசி இணைப்புகளை வெளியில் இருந்து தொடர்பு கொண்டாலும் தொடர்பு கொள்வதிலும் பதில் பெறுவதிலும் பிரச்சனை நீடிக்கிறது.

அனைத்து மாவட்ட செயலாளர்களும் இந்த பிரச்சினையினையின் தாக்கத்தை செயற்குழுவில் தெரிவித்தார்கள். நிர்வாகத்தின் மீது கோபமும், மாநில சங்கத்தின் மீது வருத்தமும் வெளிப்பட்டது.

      நிச்சயமாக தோழர்களுடைய உணவுகளை மாநிலச் சங்கம் கணக்கில் எடுத்துக் கொண்டு விரைவில் இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கும். தேவைப்பட்டால் இதற்கான போராட்ட இயக்கத்தை நடத்துவதற்கும் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.

10) மெடிக்கல் பிரச்சனைகள்
         ஆகஸ்ட் மாதம் அதாலத் முடிந்தாலும் கூட இன்னும் பல மாவட்டங்களில் மெடிக்கல் பில்கள் ERPல் சேர்ப்பதிலும் மெடிக்கல் அலவன்ஸ் தீர்மானிக்கப்படுவதிலும் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.
       டிசம்பர் மாதம் அனைத்து பில்களும் பட்டுவாடா செய்யப்படும் என மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்திருக்கிறார். ஆகவே மாவட்ட சங்கங்கள் இதனை துரிதமாக மாவட்ட நிர்வாகத்தோடு பேச வேண்டும். மாநில சங்கமும் மாநில நிர்வாகத்தோடு இந்த பிரச்சனையை எடுக்கும்.

      தோழர்களே !!

       விவாதங்கள் மிக சிறப்பான முறையில், பிரச்சினைகளை முன்வைத்து நடைபெற்றது. இயக்கத்தை மேலும் முன்னெடுப்பதற்கான சிறப்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டங்கள் அவற்றை கறாராக அமுல்படுத்த வேண்டும்.

      மாநில சங்கத்தின் பொருளாளர் தோழர் எஸ். நடராஜா நன்றி கூற கூட்டம் முடிவடைந்தது.

     கூட்டத்திற்கான google meet ink ஏற்படுத்திக் கொடுத்த தோழர். P. ராமர், தூத்துக்குடி மாவட்ட செயலர் அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பில் நன்றி.

தோழர்களே !
      (இந்த அறிக்கையினை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு வருந்துகிறேன் ????.)

தோழமையுடன்
ஆர். ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
27.11.23

Post a Comment

0 Comments