Latest

10/recent/ticker-posts

தோழர் S. வாமணன் (74 ) முதல் மாநில பொருளாளர் மறைவு

தோழர் S. வாமணன் (74 ) முதல் மாநில பொருளாளர் மறைவு


தோழர்களே,
        தோழர் S.வாமணன் AIBDPA தமிழ் மாநில சங்கத்தின் முதல் மாநில பொருளாளர் நேற்று இரவு (16.11.23) உடல் நலக்குறைவால் தனது 74 வயதில், கேரளாவில் மரணம் அடைந்தார் என்ற செய்தி நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

            கோவை மாவட்டத்தில் K.G.போஸ் அணியை வளர்ப்பதிலும், தொழிற்சங்க இயக்கத்திற்கு முன்னணி தோழர்களை உருவாக்குவதிலும், தொழிலாளர்கள் மத்தியில் இடதுசாரி அரசியலை கொண்டு செல்வதிலும் தனி முத்திரை பதித்தவர் தோழர் வாமணன்.

      கோவையில் நடக்கும் அனைத்து தொழிற்சங்க இயக்கங்களிலும் தனது பங்களிப்பை செலுத்தியவர்.

எப்பொழுதும் வெள்ளை உடை அணிந்து வருவது அவரது தனித்துவம்.

          ஓய்வு பெற்று கேரளாவிற்கு சென்ற பிறகும் நம் தோழர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர். கேரளாவிலும், இடது சாரி அரசியலை தான் வசித்த பகுதியில் கொண்டு செல்வதில பங்காற்றினார்.

      அவரது மறைவுக்கு AIBDPA தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக அஞ்சலியையும் அவரது குடும்பத்தினருக்கு நமது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அகில இந்திய BSNL DOT ஓய்வூதியர் சங்கம்
தமிழ் மாநிலம்
17.11.23



Post a Comment

0 Comments