Latest

10/recent/ticker-posts

12.12.2023ல் நடைபெற்ற AIBDPA புதுவை மாவட்ட பொதுக்குழு கூட்டம்

12.12.2023ல் நடைபெற்ற AIBDPA புதுவை மாவட்ட பொதுக்குழு கூட்டம்



தோழர்களே ! தோழியர்களே !!
            புதுவை மாவட்ட சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் வில்லியனூர் கிளை உட்பட 11.12. 2023 அன்று மாவட்டத் தலைவர் தோழர். வி. ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர். எம். சண்முகசுந்தரம் (Rtd DGM) தியாகிகள் அஞ்சலி உரையை வாசிக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

       மாவட்டச் செயலர் தோழர். வி. ராமகிருஷ்ணன் பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் தோழர். வி. ராமகிருஷ்ணன் அவர்கள் ஓய்வூதிய மாற்றம் சம்பந்தமான நமது அகில இந்திய சங்கத்தின் நிலைபாடுகள், நடந்த இயக்கங்கள், DOT நிர்வாகம் நமது ஓய்வூதிய கோரிக்கையின் மேல் நமது சங்கம் கடைபிடிக்கும் நிலைபாடு ஆகியவற்றை குறித்து விளக்கினார். மாற்று சங்கம் தொடுத்திருந்த வழக்கின் தீர்ப்பினால் ஓய்வூதிய மாற்றத்தின் தீர்வு உடனடியாக எட்டுவதற்கு தடையாக இருப்பதையும் சுட்டி காட்டினார்.

             புனேவில் நடைபெற்ற நமது மத்திய சங்க செயற்குழு ஓய்வூதிய பிரச்சனைகள் குறித்து அனைத்து உறுப்பினர்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவின்படி பொதுக்குழுவில் அதன் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.

      மேலும் நமது பொதுச்செயலாளர் அவர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தியினை நமது மாநில சங்கம் தமிழாக்கம் செய்து நமது சங்க வாட்ஸ் அப்பில் 8 பக்க செய்தியாக வெளிப்படுத்தி இருந்தது. அதை நாம் பிரிண்ட் செய்து அனைத்து தோழர்களுக்கும் கொடுத்துள்ளோம்.

          தோழர் சண்முகசுந்தரம் (Rtd DGM) அவர்களும் 2000 ஆண்டில் DOT, BSNL என்ற பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது. அன்றைய நாளில் DOT நிர்வாகம் மற்றும் மத்திய அரசாங்கம் ஓய்வூதியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் சுட்டிக்காட்டினார்.
மாவட்ட செயலர் தோழர் வி. ராமகிருஷ்ணன் மாநில சங்க செயற்குழு முடிவின்படி NCCPA அகில இந்திய மாநாட்டிற்கான AIBDPA சார்பாக மற்றும் volunteers குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதையும் அந்த மாநாட்டிற்கு நமது மாவட்டத்தின் ஒதுக்கீடு தொகையான ரூபாய் 10 ஆயிரம் அளிக்கப்பட்டு உள்ளது எனவும், மாநாட்டின் பொது அரங்கிற்கு நமது மாவட்டத்தில் இருந்து விருப்பமுள்ள தோழர்கள் கலந்து கொண்டால் அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்தார்.

               தோழர். என். கொளஞ்சியப்பன் முன்னாள் BSNLEU மாவட்ட செயலர் இன்றைய அரசியல் நிலைமை குறித்தும் புதுவை மின்சாரத் துறையில் வாடிக்கையாளர் வீடுகளில் prepaid metre பொருத்துவதை எதிர்க்கும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் வற்புறுத்தினார்.
இறுதியில் மாவட்டப் பொருளாளர் தோழர். எம். பாலசுப்பிரமணியன் அவர்கள் பொதுக்குழுவில் பங்குபெற்ற அனைத்து தோழர் தோழியர்களுக்கும் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்
நன்றி
தோழமையுடன்
வி. ராமகிருஷ்ணன்
மாவட்ட செயலர்
AIBDPA
புதுவை மாவட்டம்.

Post a Comment

0 Comments