Latest

10/recent/ticker-posts

டிசம்பர் 17 -  ஓய்வூதியர் தினம் - அனைத்து‌ ஓய்வூதியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

டிசம்பர் 17 -  ஓய்வூதியர் தினம் - அனைத்து‌ ஓய்வூதியர்களுக்கும் தமிழ் மாநிலச் சங்க வாழ்த்துக்கள் !!

 


         ஓய்வூதியத்தில் உள்ள வேறுபாடுகளைக் களைய பாதுகாப்பு துறையில் நிதி ஆலோசகராக இருந்து ஓய்வு பெற்ற டி.எஸ்.நக்ரா மற்றும் பொதுநலம் என்ற அமைப்பும் தொடர்ந்த வழக்கில் 17.12.1982 அன்று உச்ச நீதிமன்றம் ‌வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

"ஓய்வூதியம்‌ என்பது தானம் அல்ல. அரசின் கருணையினாலோ, பரிதாபத்தாலோ‌ வழங்கப்படுவதல்ல"

தங்கள் வாழ்வின் ‌பயனுள்ள காலம் முழுவதும் ‌அரசாங்கத்திற்காக உழைத்தவர்களுக்கு‌ சமுதாய பொருளாதார நீதி‌வழங்கப்பட வேண்டும்.

இது இந்திய அரசியல் சட்டம் 309, மற்றும் 148மற்றும் உட்பிரிவு 5ன் கீழ் அடிப்படை உரிமை.

ஓய்வூதியம் என்பது ஓய்விற்கு முன் என்ன வாழ்க்கை நிலையில் இருந்தாரோ அதே நிலையில் வாழ்க்கை நடத்த பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.

ஒரே பதவியில் இருந்து ஓய்வு முன்னதாக ஓய்வு பெற்றதால் விலைவாசி உயர்விற்குப்பின்னும் குறைந்த ஓய்வூதியர் பெற வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

விலை உயர்விற்கு ஏற்ப ஓய்வூதியத்தை உயர்த்த எந்த முன்‌உதாரணமும் இல்லை என்ற அரசின் வாதம் பொருளற்றது.

இது தீர்ப்பின் சுருக்கம்.‌ இன்றும் ஓய்வூதியத்தில் discrimination நீடிக்கிறது. மத்திய அரசு whole sale price indexக்கு அ.வி.படியை மாற்றவும், அத்துடன் 2030க்குள் ஓய்வூதியத்தை மறுபரிசீலனை செய்யவும் ஆலோசனை உள்ளதாக தெரிகிறது.

மாநில அரசு வழங்கவேண்டிய அ.வி.படி அறிவிப்பு ஆறு மாதத்திற்கு பின் வழங்குவது வழக்கமாகிவிட்டது. இந்த ஜுலை 2023 ல் அ‌.வி.படி உரிய தேதியில் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர வேண்டும்.

மருத்துவக் காப்பீடு காசில்லா மருத்துவம் என்று சொல்லப்படுகிறது.

உண்மையில் காசுள்ள மருத்துவமாகவே உள்ளது. ஒரு ஓய்வூதியதாரரிடமிருந்து ரூ.497/வீதம் எட்டரை லட்சம் ஓய்வூதியதாரர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.

       சந்தா பிடித்தம் செய்யப்படுவதால் மருத்துவ செலவினை பெற தகுதியுடையவர்களே என்றும், யூனைடெட் இந்தியா இன்ஷ்யூரன்ஸ் மருத்துவ செலவினை நிர்ணயிக்கக் கூடாது எனவும், அரசு கொடுக்க கடமைப்பட்டது எனவும் நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது.

இவைகள் பொருட்படுத்தப் படுவதில்லை.
The fundamental right to life includes the right to health and includes the right to health and access basic medical care. Govt.must provide timely treatment to a person.
இது அடிப்படை உயிர்வாழும் உரிமை.

இதில் அரசிற்கு செலவுமில்லை. நமது பிடித்தத்தில் உள்ள நிதியிலிருந்தே கொடுக்கப்படுகிறது.

எத்தனை அரசாணை பிறப்பித்தாலும் மருத்துவக் காப்பீடு சரியான பயனளிக்கவில்லை இவை களையப்பட வேண்டும்.

ஓய்வூதியர்களே !!

    ஓய்வூதியத்தை காத்துக் கொள்ளவும், பிற பிரச்சினைகளுக்காகவும், அதற்கு ‌தார்மீக ஆதரவு பெற சமூகப் பிரச்சினைகளில் மக்களுடன் கைகோர்க்க உறுதி ஏற்போம்.

ஓய்வூதியர்களை ' Right to Dignity and Respect' என்று வரையறுக்கப்பட்டுள்ள மனித உரிமையுடன் வாழ வைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

Post a Comment

0 Comments