Latest

10/recent/ticker-posts

வேலூரில் டிசம்பர் 17 ஓய்வூதியர் தினம் மற்றும் முதல் அமைப்பு கூட்டம்

வேலூரில் டிசம்பர் 17 ஓய்வூதியர் தினம் மற்றும் முதல் அமைப்பு கூட்டம்



அன்பான தோழர்களே, வணக்கம் !

      மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வேலூர் மாவட்டம் சார்பில் வேலூரில் முதல் அமைப்பு கூட்டம் மற்றும் டிசம்பர் 17 ஓய்வூதியர் தினம் வேலூர் பெல்லியப்பா கட்டிடத்தில் 17.12.2023, ஞாயிற்றுக்கிழமை காலை 10.45மணி அளவில், மின் சிறகுகள் கலைக் குழுவின் புரட்சி பாடலுடன் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தோழர். எம். பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் ஒருங்கிணைப்பு குழு தலைமை தாங்கினார். தோழர். பி. லோகநாதன் மாவட்ட செயலர் ஒருங்கிணைப்பு குழு, வரவேற்பு உரையும், ஒருங்கிணைப்பு குழுவிற்கு ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறை குறித்தும் பேசினார். வருகை தந்துள்ள தோழர்கள் நிதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ஓய்வூதிய தோழர்கள் ரூபாய் 11 ஆயிரத்து 130 நிதியாக அளித்தனர்.

       வாழ்த்துரை: தோழர்கள் என். பிச்சுமணி மாவட்ட பொருளாளர் ஒருங்கிணைப்பு குழு, பா.ரவி மாவட்ட செயலாளர் டி என் ஜி பி ஏ, வி ஏழுமலை மாவட்ட செயலர் ஏ ஐ பி டி பி ஏ, A. கதிர் அகமது மாவட்ட செயலாளர் ஏ ஐ பி ஆர் பி ஏ , சி.ஞானசேகரன் கன்வினர், மாநகர தொழிற்சங்கம் வேலூர், எ. தாமோதரன் மாவட்ட செயலர் டி என் இ பி டபுள்யூ ஓ , ஆர் .கேசவன், மாவட்ட தலைவர் எல்ஐசி பி ஏ. N. கோவிந்தசாமி, மாவட்டச் செயலாளர் டி என் எஸ்டிசி ஆர் இ டபிள்யூ எ , K. குமார் மாவட்ட செயலர் ஜி ஐ பி ஏ, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

             ஒருங்கிணைப்பு குழுவின் முதல் அமைப்பு கூட்டத்தில் AIBDPA, TNGPA, AIPRPA, LICPA, TNSTC-REWA, TNEB PWA, GIPA, DRPA ஆகிய எட்டு அமைப்புகளின் சார்பில், சங்கத்திற்கு இரண்டு நிர்வாகிகள் என்ற அடிப்படையில் முறையே துணைத் தலைவர், செயலர் என்று எட்டு அமைப்பின் 16 நிர்வாகிகளோடு தோழர். M. பன்னீர்செல்வம் அவர்கள் தலைவராகவும், தோழர் P. லோகநாதன் செயலாளராகவும், தோழர் A. கதிர் அகமது அவர்கள் பொருளாளராகவும்தேர்வு செய்யப்பட்டனர்.

           தோழர் என் பிச்சுமணி பொருளாளர் அவர்கள் 2017 முதல் 2023 வரையிலான ஆண்டிற்கு நிதிநிலை அறிக்கையை வாசித்தார். இறுதியாக தோழர். B. கிருஷ்ணமூர்த்தி டி என் ஜி பி ஏ மாநில பொதுச் செயலாளர், அவர்கள் சிறப்புரை ஆற்றினார் .புதிய ஓய்வு திட்டத்தின் ஆபத்துக்களைப் பற்றியும், அதன் அடிப்படையில் மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதியத்தை நிறுத்தக்கூடிய சட்டத்தை மத்திய அரசின் வழிகாட்டுதல் படி இயற்றக்கூடிய அபாயம் உள்ளது என்பதனையும் ஊழியர்கள் உணர வேண்டும் என்றும் எச்சரித்தார். இவைகளை எல்லாம் முறியடிக்க கூடிய வகையில் வரும் 28 12.2023 அன்று நடக்கும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தையும் நாம் ஆதரிக்க வேண்டிய தேவை பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் முதலமைச்சர் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார்

                 தோழர் எஸ் .பிரபா சந்தர், டி ஆர் பி யு அவர்கள் நன்றி கூறினார். 200க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மதியம் ஒன்றரை மணி அளவில் கூட்டம் சிறப்பான முறையில் முடிவுற்றது. கூட்டத்திற்கு பின் பங்கேற்ற ஓய்வூதியர்களுக்கு சிறப்பான முறையில் அனைவரும் மகிழக்கூடிய அளவில் விருந்து அளிக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் கூட்டமைப்பின் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

தோழமையுடன்
பொன். லோகநாதன்
மாவட்ட செயலாளர்.

Post a Comment

0 Comments