வெண்மணி 44 உயிர்கள் ஆதிக்க சமூகத்தினால், நில உடமையாளர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்ட கொடூரம். 55 ஆண்டு காலமாக அந்தத் தனல் இன்னும் மக்கள் மத்தியில் வெந்து கொண்டிருக்கிறது. அவர்களின் மரணஓலம் நம் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகள் வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது நடைமுறை.
AIBDPA தமிழ் மாநில சங்கம் கடந்த ஆண்டு கும்பகோணம், தஞ்சை தோழர்களிடம் தகவல் கொடுத்து மாநில சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்த கேட்டுக் கொண்டோம். அது நன்றாக நடைபெற்றது.
இந்த ஆண்டு மாநிலச் சங்க செயற்குழுவில் முடிவு எடுத்து அதனை ஒரு மாநில நிகழ்வாக நடத்துவதற்கு திட்டமிட்டோம். பல இன்னல்கள் இருந்தன. தென் மாவட்டங்களில் தொடர் மழை, வெள்ளம். பல இடங்களில் புதுவித நோய்கள். எனினும் அந்த நிகழ்வினை நடத்துவது என்று தீர்மானித்தோம்.
திருச்சி, தஞ்சை, கும்பகோணம், கோயம்புத்தூர் மாவட்ட சங்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து தோழர்கள் ஒரு கணிசமான அளவில் வந்திருந்தார்கள் நாகப்பட்டினம் கிளை தோழர்கள் முழுமையாக கலந்து கொண்டார்கள். 80 க்கும் மேற்பட்ட தோழர்களோடு நம்முடைய மாநில சங்கத்தின் அஞ்சலி நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
வந்திருந்த தோழர்களுக்கு தங்குவதற்கு திருமண மண்டபம், காலை சிற்றுண்டி, மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தோம்.
தோழர்களே, இந்த நிகழ்வினை வெற்றிகரமாக்குவதற்கு உதவி செய்த நாகை தோழர்கள் தோழர் P. செல்வராஜ் மாவட்ட தலைவர், தோழர் K.மணிவண்ணன் மாவட்ட செயலாளர், தோழர் M.குருசாமி மாநிலத் அமைப்பு செயலர், தோழர் அருட்பெரும் ஜோதி காரைக்கால், தோழர் P. சண்முகம், தோழர் K. மேகநாதன் ஆகியோர் தங்களை இதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். இரண்டே நாட்களில் இந்த பெரும் பணியினை சிறப்பாக செய்து முடித்த அத்தனை தோழர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பில் நம்முடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாநில சங்கம் வெண்மணி தியாகிகள் அஞ்சலி நிகழ்வை ஆண்டுதோறும் செய்ய வேண்டும் என பல்வேறு பகுதிகளில் இருந்து தோழர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். *நிச்சயமாக அந்த வர்க்க பணி தொடரும்*.
தோழமை வாழ்த்துக்களுடன் ஆர் ராஜசேகர் மாநில செயலாளர் 26 12 23
0 Comments