Latest

10/recent/ticker-posts

வெண்மணி நினைவு தினம் டிசம்பர் 25 !!

வெண்மணி தினம் டிசம்பர் 25

தோழர்களே !
       வெண்மணி தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மத்தியதர ஊழியர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த ஆண்டு நாமும் கலந்து கொண்டு வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது என நம்முடைய மாநில செயற்குழு முடிவெடுத்திருக்கிறது.

           அதன் அடிப்படையில் மாவட்டச் சங்கங்கள் டிசம்பர் 25 அன்று வெண்மணி தியாகிகள் இடத்தில் AIBDPA சங்கத்தின் சார்பாக அஞ்சலி செலுத்துவதற்கு அணி திரள வேண்டும்.

        வரக்கூடிய தோழர்கள் தகவலை முன்கூட்டி மாநில சங்கத்திடம் தெரிவித்தால் தங்குவதற்கும், காலை தயாராவதற்கும் ஏற்பாடுகளை நம்மால் சரியாக செய்ய முடியும்.

    இதனை ஒரு வர்க்க கடமையாக எடுத்துக் கொண்டு தோழர்கள் வெண்மணிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

தோழமை வாழ்த்துக்களுடன்
*ஆர் ராஜசேகர்*
*மாநிலச் செயலாளர்*
15.12.23

Post a Comment

0 Comments