Latest

10/recent/ticker-posts

AIBDPA-ஈரோடு மாவட்டம் பெருந்துறை பொதுக்குழு கூட்டம் மற்றும் பிரச்சார இயக்கம்.

AIBDPA-ஈரோடு மாவட்டம் பெருந்துறை பொதுக்குழு கூட்டம் மற்றும் பிரச்சார இயக்கம்.



 

        இன்று 6.12.23 காலை ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொலைபேசி நிலையத்தில் கிளை தலைவர் தோழர். ரங்கசாமி அவர்கள் தலைமையில் பெருந்துறை கிளை கூட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் தோழர். ஈஸ்வரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

              மாவட்ட துணை செயலாளர் தோழர் M. நடராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பிரச்சார இயக்கம், மாவட்ட மாநாடு பற்றி விரிவாக மாவட்ட செயலாளர் தோழர்.P. சின்னசாமி அவர்கள் விளக்கமாக பேசினார். சிறப்பு அழைப்பாளர் தோழர் C. மணி கிளை பிரச்சினைகள் பற்றி பேசினார்.
          உறுப்பினர்கள் அனைவருக்கும் மாவட்ட மாநாடு அழைப்பிதழ் மற்றும் பென்சன் மாற்றம் பற்றி மாவட்ட சங்கம் தயாரித்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இறுதியில் தோழர். ராமகோடிராஜன் நன்றி கூறி நிறைவு செய்தார். கிளை கூட்டத்தில் 20 தோழர்கள் கலந்து கொண்டனர்.

சின்னசாமி மாவட்ட செயலாளர். ஈரோடு

Post a Comment

0 Comments