Latest

10/recent/ticker-posts

AIBDPA ஈரோடு மாவட்ட சிறப்புக்கூட்டம்.

AIBDPA ஈரோடு மாவட்ட சிறப்புக்கூட்டம்.



 

        ஈரோடு மாவட்ட மாநாடு வரும் 17/12/23 நடைபெறுவதை ஒட்டி இன்று 9.12.23 காலை ஈரோடு டெலிபோன் பவன் சங்க அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் தோழர். C. பரமசிவம் அவர்கள் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. சித்தோடு, சத்தி கிளை தவிர 17 கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட உதவி செயலாளர் தோழர் K. N. முகமது ரபி வரவேற்புரை நிகழ்த்தினார்.

      நகல் ஆண்டறிக்கையை செயற்குழு ஒப்புதலுக்காக மாவட்ட செயலாளர் தோழர். P. சின்னசாமி அவர்கள் சமர்ப்பித்தார். நிர்வாகிகள் தெரிவித்த திருத்தங்கள் உடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மாவட்ட பொருளாளர் தோழர். V. மணியன் அவர்கள் நகல் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தார். திருத்தங்கள் உடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

      கிளை செயலாளர்கள் அனைவரும் விவாதங்களில் கலந்து கொண்டு மாநாடு ஏற்பாடுகள் பற்றி கருத்து தெரிவித்தனர். மாநில உதவி செயலாளர் தோழர் L. பரமேஸ்வரன் கலந்து கொண்டார். கிளை செயலாளர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் 40 பேர் கலந்து கொண்டனர்.
இறுதியில் ஈரோடு மேற்கு 1 கிளை செயலாளர் தோழர் சொளந்தரராஜன் நன்றி கூறினார்.

சின்னசாமி மாவட்ட செயலாளர். ஈரோடு

Post a Comment

0 Comments