Latest

10/recent/ticker-posts

கடலூர் மாவட்டம் AIBDPA- விழுப்புரம் கிளை சிறப்பு கூட்டம்

கடலூர் மாவட்டம் AIBDPA- விழுப்புரம் கிளை சிறப்பு கூட்டம்

 



தோழர்களே ! வணக்கம்.

        இன்று (10.12.2023) காலை 11.00 மணியளவில் விழுப்புரம் கிளையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கிளைத்தலைவர் தோழர். S.P. ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் 14 தோழர்கள் கலந்து கொண்டனர்.

        கிளைச்செயலர் தோழர். R.முத்துவேல் அவர்களின் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் தோழர். N. மேகநாதன் அஞ்சலிவுரை ஆற்றினார்.

      நடைபெற்ற இந்த சிறப்பு கூட்டத்தில் மாநிலத்துணைத் தலைவர் தோழர். P. மாணிக்கமூர்த்தி அவர்கள் பூனே மத்திய செயற்குழு முடிவுகளை விளக்கி உரையாற்றினார். பென்ஷன் ரிவிஷன் இன்றைய நிலை, நமது சங்கத்தின் நிலைபாடு மற்றும் மருத்துவப்படி, மருத்துவபில், சென்னை சொசைட்டி பிரச்சினை உள்ளிட்ட அனைத்தையும் தொகுத்து சிறப்புரையாற்றினார். நிறைவாக கிளை பொருளாளர் தோழர். G. நாகராஜன் நன்றி கூறி கூட்டம் முடிவுற்றது.

தோழமையுடன்,
R.முத்துவேல்
கிளைச்செயலர்
விழுப்புரம்.

Post a Comment

0 Comments