Latest

10/recent/ticker-posts

சேலம் மாவட்டம் AIBDPA நாமக்கல் கிளைக் கூட்டம்

சேலம் மாவட்டம் AIBDPA நாமக்கல் கிளைக் கூட்டம்

  





      சேலம் மாவட்டம் AIBDPA நாமக்கல் கிளைக் கூட்டம்  8-12-2023ல் நாமக்கல்லில் வைத்து தோழர் R. ராஜகோபால் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தோழர். S.ராமசாமி கிளைச் செயலர் வரவேற்புரை ஆற்றினார்.

          தோழர்கள் V.கோபால் ADS, தோழர் S.அழகிரிசாமி ADS ஆகியோர் முக்கிய பிரச்சினைகளான பென்சன் மாற்றம், மெடிக்கல் பில் சம்பந்தமாக விளக்கவுரை ஆற்றினர்.தோழர் அங்கு ராஜ் SMG BS, தோழர் P.ராமசாமி மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

          மாவட்ட செயலர் தோழர் S.தமிழ்மணி பூனே மத்திய செயற்குழு முடிவுகள். பென்சன் மாற்றம், மெடிக்கல் பில் சம்பந்தமாக விளக்கவுரை ஆற்றினார். ஓய்வூதியர் மத்தியில்  பிரச்சார இயக்கம் NCCPA அகில இந்திய மாநாடு  சென்னை, AIBDPA சேலம் மாவட்ட மாநாடு, நிலுவையிலுள்ள பிரச்சினைகள் பற்றி எடுத்துக் கூறினார்.
        மாநாடுகள் நடத்திட  அதிக செலவு ஆகும் என்கின்ற நிலை உள்ளது. எனவே உறுப்பினர்கள்  மாவட்ட செயற்குழு முடிவுப்படி ரூ.1000 நன்கொடையாக வழங்கி மாநாடுகளை வெற்றிகரமாக நடத்திட ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார். அனைவரும் ஏற்றுக் கொண்டனர். உறுப்பினர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இறுதியில் தோழர் மஹபூப் ஜான் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments