Latest

10/recent/ticker-posts

பூனே மத்திய செயற்குழு முடிவுகளை அமுலாக்கிட மாவட்டச் செயலர்களுக்கு வேண்டுகோள் !!

மாவட்டச் செயலாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் !!

பூனே மத்திய செயற்குழு கூட்ட முடிவுகள்

டிசம்பர் 1 முதல் 10 வரை தீவிர பிரச்சாரம்

பென்ஷன் -டெல்லி PBCAT தீர்ப்பாயத்தின் தீர்ப்பு - அதன் விளைவுகள் ???

தோழர்களே !!
      நமது மத்திய சங்க செயற்குழு கூட்ட முடிவுகளுக்கிணங்க டிசம்பர் 1 முதல் 10 வரை பென்ஷன் ரிவிஷன் சம்பந்தமான விவரத்தை தோழர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என மத்திய சங்கம் முடிவெடுத்துள்ளது.

       அதன் அடிப்படையில் ஒரு சுற்றறிக்கையும் தயாராகி ஆங்கிலத்திலும் தமிழிலும் உங்களிடம் உள்ளது. அதை மாநில / மாவட்ட / கிளை நிர்வாகிகள் அனைவரும் நகல் எடுத்து கையில் வைத்துக் கொள்ளவும். 

முழுமையாக படிக்கவும்.

     மாவட்ட செயலாளர்கள் *அனைத்து நாட்களிலும் கிளை கூட்டங்கள்* நடத்துவதை, ஊழியர்கள் சந்திப்பதை உத்தவாதப்படுத்த வேண்டும். ஒரு விரிவான பிரச்சாரத்திற்கு திட்டமிடுவது, மத்திய செயற்குழு கூட்டத் முடிவை முழுமையாக அமல்படுத்துவதாக இருக்கும்.

            இறுதியாக விரிவடைந்த மாவட்ட செயற்குழு போன்ற பெருமளவு ஊழியர்கள் சந்திக்கக்கூடிய நிகழ்ச்சியையும் திட்டமிட வேண்டும்.

தோழமை வாழ்த்துக்கள்,
*R.ராஜசேகர்*
*மாநில செயலர்*
3.12.23

Post a Comment

0 Comments