நெல்லை மாவட்டம் அம்பை கிளையில் சிறப்பு கூட்டம் & பிரச்சார இயக்கம்
December 26, 2023
நெல்லை மாவட்டம் அம்பை கிளையில் சிறப்பு கூட்டம் & பிரச்சார இயக்கம்
வணக்கம் தோழர்களே...!!!
அகில இந்திய செயற்குழு முடிவின் அடிப்படையில் 26.12.2023 அன்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளையில் சிறப்பு கூட்டம் மற்றும் பிரச்சார இயக்கமும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் தோழர். P. முருகன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் தோழர். S. P. கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அகில இந்திய உதவிப் பொருளாளர் தோழியர். V. சீதாலட்சுமி மற்றும் மாவட்ட உதவித் தலைவர் தோழர். C. சுவாமி குருநாதன் ஆகியோர் அகில இந்திய செயற்குழு முடிவுகள் பற்றியும், சம்பளக் கமிஷனில் ஏற்பட்டிருக்கும் நிலைகள் பற்றியும் சிறப்புரையாற்றினர்.
நிறைவாக கிளைப் பொருளாளர் தோழர் V. கல்யாணி நன்றி கூறினார்.
சிறப்புக் கூட்டம் நடத்தி மாவட்ட மாநாட்டிற்கு முதல் தவணையாக ரூபாய் 9000/= (ரூபாய் ஒன்பது ஆயிரம்) நன்கொடை வழங்கிய அம்பாசமுத்திரம் கிளையை மாவட்ட சங்கம் வெகுவாக பாராட்டி புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
கலந்து கொண்ட அத்தனை தோழர்களுக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்கள்...
தோழமையுடன், _ச.முத்துசாமி_ , மாவட்ட செயலாளர், நெல்லை மாவட்டம். 26/12/2023. ????????????????????????????????
0 Comments