மாதம் தோறும் கூட்டம் நடத்தும் கோவை மாவட்ட அவனாசி கிளை
வாழ்த்துகிறோம் !!!!
தமிழகத்தின் 100 ஆவது கிளையான அவிநாசி கிளை மாதம் தோறும் கூட்டம் நடத்தும் அவனாசி கிளையின் மாநாடு கடந்த மாதம் கிளை மாநாடு 27 ஆம் தேதி முடித்து சரியாக ஒரே மாதத்தில் தனது கிளை மாநாட்டிற்கு பிறகு தனது முதல் கூட்டத்தை 27.12.23ல் நடத்தியுள்ளது. கிளைக் கூட்டம் கிளை தலைவர் தோழர். ஆரோக்கியநாதன் அவர்கள் தலைமையில் நடந்தது. தோழர். கணேசன் கிளைச் செயலாளர் அனைவரையும் வரவேற்று பேசினார். 13 தோழர்களில் 11 தோழர்கள் பங்கெடுத்தனர்.
மாவட்டச் செயலாளர் தோழர். குடியரசு மாவட்டச் சங்க செய்திகளையும் ஒவ்வொரு குடும்பங்களின் மீதும் எப்படி அக்கறை செலுத்துகிறது என்று பல்வேறு உதாரணங்களை எடுத்துச் சொல்லி வாழ்த்துரை வழங்கினார். தோழர். T.K. பிரசன்னா மாநில அமைப்பு செயலாளர் சம்பள கமிஷன் இன்றைய சூழலும் பற்றியும் ஓய்வூதியும் எப்படி வந்தது என்றும் அகில இந்திய, மாநில சங்க செய்திகளை அழகாக எடுத்து வைத்தார்.
தோழர். கணேசன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். தோழர்களே நூறாவது கிளை ஆனாலும் ஒவ்வொரு மாதமும் கூட்டத்தைக் கூட்டி உறுப்பினர்களுக்கு சேர்க்க வேண்டிய தகவலை மாதம் தோறும் கொடுக்கக்கூடிய அவிநாசி கிளை சங்கத்தை மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
நூறாவது கிளை என்றாலும் மாதந்தோறும் 100% கிளைக் கூட்டத்தை நடத்த உத்தரவாதப்படுத்துவது நமது மாவட்டத்திற்கு மிகவும் பெருமையாக உள்ளது. இனி வரும் காலங்களில் அவனாசி கிளைச் சங்கம் ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதி கிளைக் கூட்டம் நடத்துவது என்றும் அந்தக் காலகட்டத்தில் ஏதாவது ஞாயிறு மற்றும் விடுமுறையாக இருந்தால் அடுத்த நாள் கிளைக் கூட்டம் நடத்தும் என்ற ஒரு தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கிளை சங்கத்தின் பணி சிறக்க தொடர மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
0 Comments