Latest

10/recent/ticker-posts

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை & பாளை கிளைகளின் சிறப்பு கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை & பாளை கிளைகளின் சிறப்பு கூட்டம்

வணக்கம் தோழர்களே...!!!

    திருநெல்வேலி & பாளையங்கோட்டை கிளைகளின் சிறப்பு கிளைக் கூட்டம் 28-12-2023 வியாழக்கிழமையன்று  காலை 10 மணிக்கு BSNLEU அலுவலகம், வண்ணாரப்பேட்டை திருநெல்வேலி-3 ல் வைத்து நடைபெற்றது. திருநெல்வேலி கிளைத் தலைவர் தோழர் A.அய்யம்பிள்ளை தலைமை தாங்கினார். தோழர். S. செல்லத்துரை கிளைச் செயலர் திருநெல்வேலி அஞ்சலி உரையாற்றினார். தோழர். P. சூசை, கிளைச் செயலாளர் பாளையங்கோட்டை வரவேற்புரை நிகழ்த்தினார்.

              பூனே மத்திய செயற்குழு அறைகூவல்: பென்சன் ரிவிசன்- மத்திய தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் அதன் விளைவுகளும் அறிக்கையை தோழர். S. சங்கரநாராயணன் மாவட்ட உதவிச் செயலர் ‌வாசித்தார். தோழர் S.முத்துசாமி மாவட்ட செயலாளர் துவக்க உரையாற்றினார்.

               தோழர். V.சீதாலட்சுமி, அகில இந்திய உதவி பொருளாளர் சிறப்புரையாற்றினார். தோழர். M. கனகமணி, மாவட்டத் தலைவர், தோழர் V. கிருஷ்ணன் முன்னாள் மாவட்ட செயலாளர், தோழர். M. முத்தையா மாவட்ட உதவித் தலைவர், தோழர். S. தங்கசாமி மாவட்ட உதவித் தலைவர் ஆகிய தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர். தோழர். முனிஸ்பாரதி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

               திருநெல்வேலி கிளையின் சார்பில் ரூபாய் 5,000/= மும் பாளையங்கோட்டை கிளையின் சார்பில் ரூபாய் 10,000/= மும் மாவட்ட மாநாட்டிற்கு முதல் தவணையாக நன்கொடை வழங்கினர். நன்கொடை வழங்கிய இரண்டு கிளைகளுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் புரட்சிகரமான வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
ச.முத்துசாமி,
மாவட்ட செயலாளர்,
நெல்லை மாவட்டம்.
28-12-2023.

Post a Comment

0 Comments