Latest

10/recent/ticker-posts

கோவை நகர கிளைகள் & மேட்டுப்பாளையம் இணைந்து நடத்திய சிறப்பு கூட்டம்

கோவை நகர கிளைகள் & மேட்டுப்பாளையம் இணைந்து நடத்திய சிறப்பு கூட்டம்

 



தோழர்களே !
                           பிரச்சார இயக்கம் - அகில இந்திய செயற்குழு முடிவின் அடிப்படையில் 9.12.23. இன்று கோவை நகர கிளைகள் மற்றும் மேட்டுப்பாளையம் இணைந்து நடத்திய சிறப்பு கூட்டத்திற்கு தோழர். K. சந்திரசேகரன் மாவட்ட உதவித் தலைவர் அவர்கள் தலைமையில் பிரச்சார சிறப்புக் கூட்டம் துவங்கியது. தோழர். R. ராஜசேகரன் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார். வரவேற்புரை தோழர். M. பஷீர் குறிச்சி கிளைச் செயலாளர் அனைவரையும் வரவேற்று பேசினார். அடுத்து மாவட்ட செயலாளர் தோழர் குடியரசு மாவட்ட சங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் அகில இந்திய, மாநில சங்கத்தின் நிலைப்பாடுகள் பற்றியும், சம்பளக்கமிஷனில் இருக்கும் குளறுபடிகள் பற்றியும் எடுத்துரைத்தார். அடுத்து தோழர்.V. வெங்கட்ராமன் AIOS அகில இந்திய செயற்குழு முடிவுகள் பற்றியும், சம்பளகமிஷன் பிரச்சினைகள் பற்றியும்விரிவாக எடுத்துரைத்தார். சுமார் 80 தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட பொருளாளர் N.P ராஜேந்திரன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

                    இதே தினத்தில் உடுமலை மற்றும் பொள்ளாச்சி கிளைகள் இணைந்த சிறப்பு கூட்டம் பொள்ளாச்சி தொலைபேசி வளாகத்தில் தோழர்கள் P. தங்கமணி மற்றும் C. மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது . தோழர் பிரபாகரன் பொள்ளாச்சி கிளை செயலாளர் அனைவரையும் வரவேற்று பேசினார் சிறப்பு கூட்டத்தில் தோழர் B.நிசார் அகமது ACT வாழ்த்துரை வழங்கினார். அடுத்து மாநில அமைப்புச் செயலாளர் தோழர் T.K .பிரசன்னா சிறப்புரை வழங்கினார்.அகில இந்திய செயற்குழு முடிவுகள் பற்றியும் நமது சங்கத்தின் பற்றியும் சங்கத்தின் செயல்பாடு பற்றியும் எடுத்துரைத்தார் .இப்பகுதியில் சுமார் 70 தோழர்களுக்கு மேலாக கலந்து கொண்டனர். தோழர் சின்னசாமி நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

இரு பகுதியிலும் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் அதற்கு முயற்சி எடுத்த கிளை நிர்வாகிகளுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

குறிப்பு :-அகில இந்திய சங்கத்தின் செயற்குழுவுக்கு பிறகு நடைபெற்ற கிளை மாநாடுகளில் மதுக்கரை (பாலக்காடு) ,குறிச்சி, ஒண்டிப்புதூர், பீளமேடு,அவனாசி,பொள்ளாச்சி அகில இந்திய செயற்குழு முடிவுகளில் பற்றியும், சம்பளக் கமிஷனில் ஏற்பட்டிருக்கும் நிலைகள் பற்றியும் இம்மாநாடுகளில் கலந்து கொண்ட தோழர்களுக்கு செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அகில இந்திய செயற்குழுவின் முடிவுகள் இதுவரை 400 முதல் 450 தோழர்களை சென்றடைந்திருக்கும் என்று மாவட்ட சங்கத்தின் சார்பாக கருதுகிறோம்.
A.குடியரசு, மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம் .

Post a Comment

0 Comments