Latest

10/recent/ticker-posts

தூத்துக்குடி மேற்கு கிளையில் ஓய்வூதிய மாற்றம் குறித்த பிரச்சார இயக்கம் மற்றும் சிறப்பு கூட்டம்

 தூத்துக்குடி மேற்கு கிளையில் ஓய்வூதிய மாற்றம் குறித்த பிரச்சார இயக்கம் மற்றும் சிறப்பு கூட்டம்



தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

          மத்திய மாநில சங்கங்களின் செயற்குழு கூட்ட முடிவின்படி நமது தூத்துக்குடி மாவட்ட மேற்கு கிளை சிறப்பு கூட்டம் மற்றும் ஓய்வூதிய மாற்றம் குறித்து விரிவான பிரச்சார இயக்கம் இன்று 05-12-2023 காலை 11 மணி அளவில் கிளைத் தலைவர் தோழர். சுவாமி பரமஹம்சர் தலைமையில் நடைபெற்றது. அஞ்சலி மற்றும் வரவேற்புரையை கிளைச் செயலர் தோழர். தளவாய் பாண்டியன் செய்தார். கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எட்டு பக்க அறிக்கையை கொடுத்து அதை விளக்கி மத்தியச் சங்க துணைத் தலைவர் தோழர் எஸ். மோகன்தாஸ் மற்றும் மாவட்டச் செயலர் தோழர். பெ.ராமர் சிறப்புரையாற்றினார்கள். 25க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் நிறைவாக கிளைப் பொருளாளர் தோழர். அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தோழர். தளவாய் பாண்டியன்
கிளைச் செயலர்
தூத்துக்குடி மேற்கு கிளை



Post a Comment

0 Comments