புதுவையில் NCCPA கிளை துவக்க விழா & ஓய்வூதியர் தின சிறப்பு கருத்தரங்கு
December 29, 2023
புதுவையில் NCCPA கிளை துவக்க விழா & ஓய்வூதியர் தின சிறப்பு கருத்தரங்கு
தோழர்களே ! தோழியர்களே !! புதுவையில் NCCPA அமைப்பின் சார்பில் ஓய்வூதியர் தின சிறப்பு கருத்தரங்கும் புதுவை NCCPA கிளை துவக்க விழாவும் 29.12.23 அன்று சிறப்பாக நடைபெற்றது. NCCPA அகில இந்திய அமைப்பின் தணிக்கையாளர் தோழர். R. நடராஜன் தலைமை தாங்க தோழர். K. ராதா கிருஷ்ணன் தலைவர் புதுவை மாநில ஓய்வூதியர் சங்கம் கருத்தரங்கிற்கு வந்தவர்களை வரவேற்று துவக்க உரையாற்றினார்.
தோழர். R. இளங்கோவன் NCCPAஅகில இந்திய உதவித்தலைவர் அவர்கள் ஓய்வூதியம் பற்றியும் ஓய்வூதியருக்கு தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள், புதிய பென்ஷன் திட்ட பாதகங்கள், மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் ஓய்வூதியர் விரோத நிலைபாடுகள் பற்றியும் எடுத்துக் கூறி ஒன்றுபட்ட இயக்கங்களின் அவசியத்தை வலியுறுத்தினார். புதுவை மாநில NCCPA கிளையின் தலைவராக தோழர். R. நடராஜன், AIPRPA அவர்களும் செயலாளராக தோழர். K. ராதாகிருஷ்ணன், PPA அவர்களும் பொருளாளராக தோழர் V. ராமகிருஷ்ணன் மாவட்ட தலைவர், AIBDPA அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதியில் கருத்தரங்கிற்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் தோழர் R. விடோபாய் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நமது AIBDPA மாவட்ட சங்கத்தின் சார்பில் 31 தோழர்கள் மற்றும் தோழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி தோழமையுடன் V. ராமகிருஷ்ணன் மாவட்ட செயலர் AIBDPA புதுவை மாவட்டம் 29.12.23.
0 Comments