AIBDPA ராஜபாளையம் கிளையில் 2 வது கிளை மாநாடு 16.03.2024
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நமதுAIBDPA ராஜபாளையம் கிளையின் 2 வது கிளை மாநாடு 16.03.2024 சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் ராஜபாளையம் தொலைபேசி நிலையத்தில் வைத்து நடைபெற்றது. ராஜபாளையம் 2 வது கிளை மாநாட்டை தோழர் T. அனவரதம் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். தோழர் P. சிவஞானம் அஞ்சலி உரை நிகழ்த்தினார். தோழர் C.பொன்ராஜ் கிளைச் செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தோழர். க. புளுகாண்டி மாவட்ட செயலாளர் அவர்கள் மாநாட்டை துவங்கி வைத்து துவக்கவுரையாற்றினார். தோழர்கள் S. தங்கவேல் SDE, தோழர். M. பெருமாள்சாமி மாநில உதவி தலைவர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். தோழர்கள். ஜெயபிரகாஷ் ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலாளர், M.முத்துசாமி கிளைச் செயலர் சிவகாசி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள்.
தோழர்கள் G. வெள்ளை பிள்ளையார் மாவட்ட அமைப்பு செயலாளர் மற்றும் I. முருகன் மாவட்ட உதவி தலைவர் ஆகியோர் மாநாட்டு விவாதத்தில் பங்கேற்று நல்ல பல ஆலோசனைகளை வழங்கினர்கள். கீழ்க்கண்ட தோழர்கள் தலைவர் , செயலாளர், பொருளாளராக தோழர்கள் T. அனவரதம், C. பொன்ராஜ், P. சிவஞானம் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யபட்டார்கள். இறுதியாக புதிய கிளைச் செயலர் தோழர். பொன்ராஜ் அவர்கள் நன்றி உரையாற்றி மாநாட்டை முடித்து வைத்தார்.
மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள். மாநாட்டில் கலந்து கொண்ட அத்துனை தோழர்களுக்கும், புதியதாக தேர்வு செய்யப்பட்ட தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களை தெறிவித்துகொள்கிறது.
தோழமையுடன்க. புளுகாண்டி
மாவட்ட செயலாளர் விருதுநகர்.
0 Comments