Latest

10/recent/ticker-posts

CGM திரு. D. தமிழ்மணி அவர்களுடன் மாநிலச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு 14-3-24

 தமிழ் மாநில CGM திரு. D. தமிழ்மணி அவர்களுடன் மாநிலச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு 14-3-24*

 தோழர்களே,

            தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக CGM தமிழ்நாடு நிர்வாகத்திற்கு நாம் 13-3 -24 தேதியிட்டு கடிதம் அளித்திருந்தோம். அதன் அடிப்படையில் CGM  திரு. D.தமிழ்மணி அவர்களுடன்  மாநில தலைவர் தோழர். C.K. நரசிம்மன், மாநில செயலாளர் தோழர். R. ராஜசேகர் ஆகியோர் 14- 3-24 அன்று மாலை சந்தித்து விவாதம் நடத்தினோம். ஒரு மணி நேரம் நடைபெற்ற அந்த விவாதம் ஆரோக்கியமானதாக இருந்தது. 

விவாதத்தின் அம்சங்கள்:

1) குடும்ப ஓய்வூதிய மனுக்களை CCA  அலுவலகத்துக்கு அனுப்புகின்ற பொழுது மாவட்டங்களில் நிறைய பிரச்சனைகள் வருகின்றது. CCA அலுவலகத்தின் check list படி அனுப்புவதிலும் தேவையான documents முறைப்படுத்தி அனுப்புவதிலும் உள்ள குறைபாட்டை CGM அவர்களிடம் விளக்கி இருக்கிறோம். 

அதேபோல் அனைத்து தகவல்களையும் ஒரே தபாலாக அனுப்பாமல் தனித்தனியாக அனுப்புவதினால் ஏற்படும் காலதாமதத்தையும், இதனால் குடும்ப ஓய்வுதியர்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படுவதில் காலதாமதம் நீடிக்கிறது என்றும் 

குறிப்பாக Reauthorization, Co-authorisation பிரச்சனைகளில் நிறைய விபரங்கள் தேவைப்படுகின்றன. இவற்றை கொடுப்பதிலும் ஒரு சில மாவட்டங்களில் காலதாமதம் உள்ளது என்பதனை CGM அவரிடம் விவரித்து இருக்கிறோம். 

CGM  இதற்கு தேவையான வழிகாட்டுதல்களை மாவட்டங்களுக்கு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

 2) மெடிக்கல் அலவன்ஸ்/ பில்  பட்டுவாடா கடந்த டிசம்பர்-31 அன்று செய்யப்பட்டது. மெடிக்கல் அலவன்ஸில் பல மாவட்டங்களில் பல பெயர்கள் விடுபட்டு போயிருக்கிறது. இவற்றை இதற்கு முன்பே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறோம். மீண்டும் மார்ச்-31 அன்று மெடிக்கல் பணம் பட்டுவாடா இருக்கின்ற காரணத்தால் இந்த பிரச்சினையை மீண்டும் எழுப்பி இருக்கிறோம். விடுபட்டு போன அனைத்து மெடிக்கல் அலவன்ஸ் பெயர்களையும் ERPயில் UPDATE  பண்ணுவது, அதற்கு தேவையான நிதியினை corporate அலுவலகத்திடம் கோருவது இவைதான் இந்த பிரச்சனையில் அனைவருக்கும் பயனளிக்கும் என்பதனை குறிப்பிட்டோம்.

CGM அவர்கள் இந்த பிரச்சனைகளில் தேவையான வழிகாட்டுதல் தரப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

3) அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மெடிக்கல் அதாலத்தில் ஒப்புக்கொண்டபடி நோடல் ஆபீஸர்ஸ் ஒவ்வொரு மாவட்டத்திலும் போடுகின்ற பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதனையும் 

       குடும்ப ஓய்வூதியர்களுக்கு மெடிக்கல் ஆப்ஷன் மாற்றும் வாய்ப்பை நீடிப்பதிலும் குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளையும் CGM கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

அவர் இந்த பிரச்சனைகளையும் விரைந்து தீர்ப்பதாக உறுதி அளித்துள்ளார்.

4) அதேபோல் மெடிக்கல் பில்/அலவன்ஸ் போன்றவை வங்கியில் IFSC/NEFT பிரச்சினையின் காரணமாக திரும்பி வருவதை  சம்பந்தப்பட்ட ஓய்வூதியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் மெடிக்கல் பேமெண்ட் சம்பந்தமான தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம்.

 5) அதேபோல் ஒரு ஆண்டின் இடையில் ஓய்வு பெறுபவர்களுக்கு அந்த ஆண்டுக்கான மெடிக்கல் அலவன்ஸ் (broken period) கொடுப்பதிலும் மாநில நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க    வேண்டும் என்றும் கூறியுள்ளோம். 

6) அதேபோல் மெடிக்கல் பில்கள் reimbursementல் உள்ள பல்வேறு பிரச்சனைகளை நிர்வாகம் சரி செய்து பில்கள் உடனடியாக பேமெண்ட் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற வேண்டுகோளையும் அவரை வைத்திருக்கின்றோம். 

CGM அவர்கள் நம்முடைய பிரச்சனைகளை முறையாக  தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

 தோழர்களே !!

 நாமும் மாவட்ட மட்டத்தில் ERP யில் மெடிக்கல்  bill/ அலவன்ஸ் update செய்யப்படுவதையும் அதற்கான நிதியினை மாவட்ட நிர்வாகம் கோருவதற்கும்  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

          CGMஅவர்களுடன் நடை பெற்ற அந்த விவாதம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அனைவருக்கும் மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் bills reimbursement கிடைப்பதற்கான வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

 தோழமையுடன் 
ஆர் ராஜசேகர்

மாநிலச் செயலாளர்

15.3.24

Post a Comment

0 Comments