21-3-24ல் நடைபெற்ற தமிழ் மாநிலச் சங்க மையக் கூட்டம்
தோழர்களே !!
நமது மாநில சங்கத்தின் மையக் கூட்டம் 21 3 24 அன்று ஆன்-லைன் கூட்டமாக நடைபெற்றது. அதில் மாநில தலைவர் தோழர். C.K. நரசிம்மன், மாநில செயலர் தோழர. R. ராஜசேகர், மாநில பொருளாளர் தோழர். S. நடராஜா மற்றும் மாநிலத் துணைத் தலைவர் தோழர். S. மாணிக்க மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மைய கூட்டம் மாநில தலைவர் தோழர் C.K.நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது.
இன்று 21-3-24 தோழர் M.முருகையா அவர்களின் நினைவு தினம். அவருடைய சேவைகளை நினைவுகூரும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் நடைபெற்ற விவாதங்களும் முடிவுகளும் :
1) கிளை மாநாடுகள், மாவட்ட மாநாடுகள் பற்றி பரிசீலிக்கப்பட்டது. மொத்தம் தமிழகத்தில் 18 மாவட்டங்கள், 110 கிளைகளும் உள்ளன. இது தவிர நான்கு (4) பெண்கள் கிளைகள் உள்ளது.
இதுவரை மூன்று (3) மாவட்ட மாநாடுகளும், 89 கிளை மாநாடுகளும் நடைபெற்று முடிந்திருக்கின்றன.
இது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு.
இன்னும் 21 கிளை மாநாடுகள் நடத்த வேண்டும். அவற்றை விரைவாக முடிக்க வேண்டும்.
2) அதேபோல் *மாவட்ட சங்கங்களும் மாநாடுகளை* ஜூன் இறுதிக்குள் நடத்தி முடிப்பதற்கு திட்டமிட வேண்டும்.
3) மாவட்ட மாநாட்டுக்கு முன்பாகவே *பெண்கள் கிளைகள்* துவங்காத மாவட்டங்கள் பெண்கள் கிளைகளை உடனடியாக துவக்கி ஆக வேண்டும்.
4) மாநில சங்க செயற்குழுக் கூட்டத்தை ஏப்ரல் இறுதிக்குள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
5) மாநில சங்க அலுவலகத்தை முழுமையாக பயன்படுத்துவதற்கு சில பொருட்கள் வாங்க வேண்டி இருக்கிறது. அதற்கு பிறகு மாநிலச் சங்க அலுவலகம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
6) சென்னை கூட்டுறவு சொசைட்டி வழக்குப் பதிவில் உள்ள தாமதத்தை மிகவும் கவலையுடன் பரிசீரித்தது மாநில மையம்.
இந்த பிரச்சனையில் வழக்கறிஞரிடம் பேசி விரைவு படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
7) பணி ஓய்வு முடித்த மறுநாள் ஆண்டு ஊதிய உயர்வு உள்ளவர்களுக்கு ஒரு notional இன்கிரிமென்ட் பிரச்சனை. காலதாமதமாகி கொண்டிருந்த ஈரோடு, கடலூர், பாண்டிச்சேரி வழக்கு தீர்ப்புகள் வந்துவிட்டன. தோழர்களுக்கு அனுப்பி இருக்கிறோம் அவர்களும் நிர்வாகத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.
இந்த பிரச்சனையிலும் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு நாம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
8) 2024 பொதுத்தேர்தல் பொதுத் தேர்தலை ஒட்டி நம்முடைய ஓய்வூதியர்களுக்கு வழிகாட்டும் வகையில் நம் முன் உள்ள கடமைகள் குறித்து ஒரு சுற்றறிக்கை வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
9) *CCA அலுவலக பிரச்சனைகள்* குறித்து நிர்வாகத்தோடு ஒரு சுற்று பேசிய பிறகும் பிரச்சனைகளில் பெரிய முன்னேற்றம் இல்லை. ஆகவே இது குறித்து நம்முடைய கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வலுவான கடிதம் எழுதுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
10) BSNL மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் Bill reimbursement பிரச்சனையில் மாவட்ட சங்கங்கள் கவனம் செலுத்தி பில்களை ERPல் Update செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11) மாநில செயற்குழுவை நடத்துவதற்கு விருப்பமுள்ள மாவட்டங்கள் தங்கள் விருப்பத்தை மாநில சங்கத்திலும் தெரிவிக்கலாம்.
தோழமை வாழ்த்துக்களுடன்*ஆர் ராஜசேகர்*
*மாநில செயலாளர்*
22.3.24
0 Comments