AIBDPA தமிழ் மாநில SAVINGRAM இயக்கம் மகத்தான வெற்றி 27.5.24
தோழர்களே !!
2023 அக்டோபர் மாதம் முதல் பென்ஷன் காலதாமதமாக வருவதை கண்டித்து நாம் அறிவித்திருந்த சேவிங் கிராம் இயக்கம் இன்று மிக சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது.
AIBDPA சென்னை தொலைபேசி மாநில சங்கமும் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இன்று மாலை வரை தமிழகத்தில் இருந்து 49 இமெயில்களும் சென்னை தொலைபேசியில் இருந்து 34 இமெயில்களுமாக மொத்தம் 83 ஈமெயில்கள் CCA அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த இயக்கத்தை வெற்றி பெற செய்த அனைத்து மத்திய சங்க நிர்வாகிகளுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் மாநில சங்க நிர்வாகிகளுக்கும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும், சென்னை தொலைபேசி நிர்வாகிகளுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களும். பாராட்டுக்களும்.
நிச்சயமாக இந்த இயக்கம் நல்ல தாக்கத்தை உருவாக்கும்.
CCA நிர்வாகம் நமது உணர்வுகளை புரிந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.
பிரச்சனைகள் தீரவில்லை எனில் நமது போராட்டம் தொடரும்.
போராட்ட வாழ்த்துக்களுடன்
ஆர் ராஜ சேகர்
மாநிலச் செயலாளர்
27.5.24
0 Comments