CCA-DOT மற்றும் CGM BSNL அதிகாரிகளுடன் மாநிலச் சங்கம் பேட்டி 17 4 24
தோழர்களே,
17.4.2024 அன்று மாநிலச் சங்க நிர்வாகிகள் தலைவர் தோழர். சி. கே. நரசிம்மன், செயலாளர் தோழர். R. ராஜசேகர், மாநில துணைத்தலைவர் தோழர். P. மாணிக்க மூர்த்தி ஆகியோர் CGM BSNL திரு. D. தமிழ்மணி அவர்களை சந்தித்து 13-4-2024 அன்று நாம் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் விவாதம் நடத்தினோம்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த அந்த விவாதம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இந்த விவாதத்தின் பொழுது DGM (HR) திரு. பன்னீர்செல்வம் அவர்களும் DGM (பைனான்ஸ்) திரு.அரவாழி அவர்களும் உடன் இருந்து, விவாதத்தில் கலந்து கொண்டார்கள்.
விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளும் நிர்வாக தரப்பில் நிலைப்பாடும்
1) பல மாவட்டங்களில் மெடிக்கல் அலவன்ஸ் பட்டுவாடாவில் குறைபாடுகள் உள்ளது என்பதை தெரிவித்தோம். குறிப்பாக கோவையில் 2000 பேருக்கும், ஈரோட்டில் 1500 பேருக்கும், வேலூரில் 1200 பேருக்கும், மதுரையில் பல நூறு பேர்களுக்கும் இதே போல் பல மாவட்டங்களில் பல ஓய்வூதியர்களுக்கு மெடிக்கல் அலவன்ஸ் பட்டுவாடா செய்யப்படவில்லை என்பதை தெரிவித்தோம். காரணங்கள் வெவ்வேறாக சொல்லப்படுகின்றன. ஒரு மாவட்டத்தில் INBOX ல் போட்டுவிட்டு அந்த அதிகாரி விடுப்பில் சென்று விட்டார்.
ஒரு மாவட்டத்தில் நிதி அளவீடு இல்லாததால் நாங்கள் ERPல் update செய்யவில்லை,
ஒரு மாவட்டத்தில் எங்களுக்கு கால அவகாசம் இல்லாத காரணத்தால் நாங்கள் update செய்யவில்லை. இதை எல்லாம் நாம் நிர்வாகத்திடம் எடுத்துச் சொல்லி விட்டோம். நிர்வாக தரப்பில் இதையெல்லாம் சரி செய்வதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
நாம் அடுத்த ஜூன் 30 வரை காத்திருக்காமல் இடையிலேயே நிதி பட்டுவாடா செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்ற நம்முடைய கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம்.
2) அதேபோல் மெடிக்கல் பில் பிரச்சினைகள் சிறு சிறு காரணங்களுக்காக மெடிக்கல் பில்களை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஓய்வுதியர்களுடைய பிரச்சினைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு அவை ஒரு மனிதாபிமான அடிப்படையில் பார்க்கப்பட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறோம்.
நிர்வாகம் பரிசீலிப்பதாக பதில் அளித்துள்ளனர்.
3) பிறகு Nodel Officer நியமனம்.
நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம். இப்பொழுது அதற்கு ஒரு விடிவு கிடைத்திருக்கிறது. பிப்ரவரி இறுதியிலேயே நிர்வாகம் இதற்கான ஒரு உத்தரவை வெளியிட்டு AGM மட்டத்தில் ஒரு Nodel officer போடப்பட வேண்டும் என்பதை அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். துரதிஷ்டம், எந்த மாவட்டமும் இதுவரை அதை அமுல்படுத்தியதாக நமக்கு தெரியவில்லை. ஆகவே அந்த உத்தரவு நாம் பதிவு செய்கிறோம். மாவட்ட செயலர்கள் GM மட்டத்தில் பேசி உடனடியாக நோடல் அதிகாரி நியமனத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
4) அதேபோல் திருச்சி குடும்ப ஓய்வூதியர்கள் மெடிக்கல் ஆப்ஷன் மாற்றிக் கொள்வதற்கான அந்த பிரச்சினையையும்,
5) மார்ச் மாதத்திற்கு பிறகு பணி ஓய்வு பெற்றவர்களுக்கு இடையிலே இருந்து மெடிக்கல் அலவன்ஸ் கொடுக்கக்கூடிய அந்த ஏற்பாட்டுக்கும் நாம் வலியுறுத்தி இருக்கிறோம்.
இவை தொடர்ந்து நாம் வலியுறுத்தினாலும் நிர்வாகம் அதனை பரிசீப்பதாக உறுதி அளித்து இருக்கிறார்கள்.
6) மேலும் குடும்ப ஓய்வுதியர்களுடைய மனுக்கள், விண்ணப்பங்கள் CCA அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதில் உள்ள சிக்கல்களையும், அதில் ஏற்படும் காலதாமதத்தை நாம் விவாதித்தோம். இதில் மாவட்ட நிர்வாகங்கள் போதியம் கவனம் செலுத்துவது இல்லை என்றும் இதனால் ஓய்வூதியர்கள் பாதிக்கப்படுவதையும் ஓய்வூதியர் பென்சன்கள், ஓய்வூயர்களை சார்ந்திருக்கும் தனி பெண்களுடைய ஓய்வூதியம் இவை எல்லாம் காலதாமதம் ஆவதையும் எடுத்து வைத்தோம்.
இவற்றை சரி செய்கிறோம் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
இறுதியாக இந்த பிரச்சினைகளுக்காக மாநில நிர்வாகம் BA GMகளுடன் nodel அதிகாரிகள் மற்றும் AO (Pension) இணைந்த ஒரு வீடியோ கான்ஃபரன்ஸ் நடத்துவதற்கு நிர்வாகம் தீர்மானித்து இருக்கிறார்கள்.
அதை விரைவில் நடைபெறும்.
அதில் சங்கங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டோம். அவர்கள் முதல் கூட்டத்தில் நாங்கள் எங்கள் நிலைமையை பரிசளித்துக் கொள்கிறோம்.
பிறகு சங்கங்களை அழைப்பது பற்றி நாங்கள் முடிவு செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
தோழர்களே !!
நாம் நம்மிடம் இருந்த கடலூர் மாவட்டம் தர்மபுரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் ஆகியோர் கொடுத்த நிலுவையில் இருக்கும் மெடிக்கல் பிரச்சினைகளையும் ஈரோட்டில் இருந்து வந்த ஒரு சில மெடிக்கல் பிரச்சினைகளையும் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். கடிதத்தையும் அவரிடம் சமர்ப்பித்துள்ளோம். அவர்கள் அவற்றை பார்ப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டம் பல்வேறு பிரச்சினைகளுக்கு விடிவு காண்பதாக உள்ளது.
மாவட்ட மட்டத்திலும் நம்முடைய தோழர்கள் மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் மெடிக்கல் பில் பிரச்சினைகளுக்கு மற்றும் Nodel அதிகாரி நியமனத்திற்கு உடனடியாக GM மட்டத்தில் பேட்டி கண்டு இந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்* என்று நான் கேட்டுக் கொள்கின்றோம்.
#######################
DOT பிரின்சிபல் CCA வுடன் பேட்டி.
தோழர்களே !!
17-04-2024 அன்று பிரின்சிபில் CCA திரு. அவதேஷ் குமார் அவர்களுடன் 14-4-2024 தேதியிட்ட நம்முடைய கடிதத்தின் அடிப்படையில் விவாதம் நடைபெற்றது விவாதத்தின் பொழுது Jt.CCA (Pension &PDA) திருமதி. கௌதமி பாலாசிங் அவர்களும் உடன் இருந்தார்கள்.
விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளும் நிர்வாகத்தின் பதில்களும்.
1) நாகர்கோயில் அதாலத்தில் "தீர்க்கப்பட்டது" என்று சொன்ன பல பிரச்சனைகளுக்கு இதுவரை ஓய்வூதியர்களுக்கு பலன்கள் சென்று சேரவில்லை. மேலும், பென்ஷன் ஒரு சிலருக்கு போடப்பட்டாலும் அதற்கான நிலுவை தொகை வழங்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறோம். அவர்கள் இவையெல்லாம் PDA பகுதியில் நிலுவையில் இருப்பதாகவும் அதனை தீர்ப்பதற்கு வழி செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.
இது வரை Pension மற்றும் PDA பகுதிக்கு தனித்தனி Jt.CCA என்று இருந்தனர். இதனை மாற்றி இரண்டு பகுதிகளுக்கும் ஒரே ஜாயின்ட் CCA திருமதி கௌதமி பாலாசிங் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே ஒருங்கிணைப்பு என்பது சரியாக இருக்கும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
2) அதேபோல் re- Authorisation பேமிலி பென்சனர்ஸ் பிரச்சினைகளும் பல பிரச்சனைகள் காலதாமாக இருப்பதை குறிப்பிட்டோம்.
அவை மொத்தம் 87 பிரச்சனைகள் நிலுவையில் இருப்பதாகவும் அவை மூன்று கட்டங்களில் நிலுவையில் இருப்பதையும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இவை எல்லாம் விரைவில் பரிசலிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுப்பப்படும்.
3)அதேபோல் *dependent child பெயர்களை Co Authorisation* பண்ணுவதற்கான பிரச்சினைகள் அதிலும் உள்ள காலதாமதத்தை குறிப்பிட்டு இருக்கிறோம்.
இதில் 2021 பென்ஷன் சட்டத்தின்படி புது பிரச்சினைகள் வந்து இருக்கின்ற காரணத்தினால் அவை காலதாமதம் ஆகின்றது. அவற்றையும் நாங்கள் சரி செய்கிறோம் என்று உறுதி அளித்துள்ளார்கள்.
4) பிறகு முடக்கப்பட்ட PPOக்கள் (Frezzing PPO) இதில் ஏற்படும் காலதாமதத்தையும் இது சுமார் நான்கு கட்டங்களை தாண்டி வர வேண்டி இருக்கிறது என்பதையும் நிர்வாகத்திலும் எடுத்து வைத்து இருக்கின்றோம்.
இதனால் LIFE CERTIFICATE கொடுத்த பிறகும் பலருக்கு பென்ஷன் வரவில்லை என்றும், குடும்ப பென்ஷன் உத்தரவுக்கு பிறகும் பென்ஷன் போடப்படுவதில்லை* என்பதனையும், இது மாத கணக்கில் காலதாமதமும்,
ஒரு சில பிரச்சனைகள் HELP DESK க்கு சென்று விட்டால் அது இன்னும் காலதாமதம் ஆகிறது என்பதையும் நாம் சற்று கடுமையாகவே சொல்லி இருக்கிறோம்,
அவற்றையெல்லாம் விரைவில் சரி செய்ய என்று உறுதி அளித்துள்ளார்கள்.
5) பிறகு வங்கி மற்றும் அஞ்சல் பகுதியில் இருந்து migrate ஆகாத ஓய்வுதியர்களுடைய பிரச்சனைகளையும் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். அவர்கள் அந்த சம்பந்தப்பட்ட நிர்வாகத்தோடு விவாதித்து அந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
நம்முடைய தோழர்களும் migrate ஆகாதவர்களின் பென்ஷன் பிரச்சினைகளை உடனடியாக கடிதம் மூலமாக நிர்வாகத்திற்கு தெரிவித்துவிட்டு, மாநில சங்கத்திற்கும் தெரிவிக்க வேண்டுகிறோம்.
6) பிறகு migration ஆகின்ற பொழுது வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு சில PPOக்கள் அந்த பிரச்சனையையும் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். அதையும் அவர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களோடு பேசி தீர்ப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்.
7) பிறகு DLC Update ஆனபிறகு அந்த மாத பென்ஷன் உடனடியாக போடப்படுகிறது. ஆனால் நிலுவைத் தொகை போடுவதில் காலதாமதம் உள்ளது என்பதனையும், தொடர்ந்து சங்கமோ தனிநபரோ நிர்பந்தித்தால் மட்டுமே அது உடனடியாக வருவதாகவும் சுட்டிக்காட்டினோம். Automatic arrears போடுவதற்கு SAMPAAN SOFTWAREல் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறோம். நிர்வாகம் இதற்கா upgraded version SAMPAMN 2.0 விரைவில் அமலாக்கப்படும் என்றும் தற்போது உள்ள அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்
ARREARS பிரச்சனையை நாம் அழுத்தமாக வலியுறுத்தினோம். உடனடியாக கவனிப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்.
8) பிறகு *Despatch sectionல்* கொடுக்கப்படும் கடிதங்கள் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு செல்வதில்லை என்பதனை உதாரணத்தோடு குறிப்பிட்டு காட்டினோம். நாம் நேரடியாக கொடுத்த ஒரு சில கடிதங்கள் கூட ஒரு வாரத்துக்கு மேல் பகுதிக்கு சென்றடையவில்லை என்பதையும் குறிப்பிட்டோம்.
அவர்கள் அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்.
9) பிறகு CCA அலுவலகத்தில் புதிதாக மூன்று எண்கள் கொடுக்கப்பட்டு மூன்று கவுண்டர்கள் திறக்கப்பட்டு ஓய்வுதியர்களுடைய பிரச்சினைகளை தீர்க்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அது முறையாக இன்று அமுலில் இல்லை என்பதையும், ஒரு கவுண்டர் மட்டுமே திறக்கப்பட்டு இருக்கிறது,
தொலைபேசி எண்களில் பதில் இல்லை என்பதையும் தெரிவித்தோம். அவர்கள் சிலர் விடுப்பில் சென்று இருக்கின்றார்கள் என்று காரணம் சொன்னாலும் நாம் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய ஓய்வுதியர்களுடைய பிரச்சனைகளை கேட்பதற்கு வழிவகுக்க செய்யப்பட வேண்டும் என்று கூறியிருக்கின்றோம். அவர்கள் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள்.
தோழர்களே
10) அதேபோல் *KYP படிவங்கள்* இப்பொழுது நிர்வாகத்தால் கோரப்பட்டுள்ளது.
நாம் இதனை விவாதித்தோம்.
இதற்கு முன்பாகவும் KYP Forms கொடுத்திருக்கிறோம். IDENTITY கார்டுக்கு விண்ணப்பங்கள் கொடுத்திருக்கின்றோம். ஆனால் இவை எல்லாம் முறையாக பரிசலிக்கப்படவில்லை அனைத்தும் நிலுவையில் உள்ளது. இதற்கு முன்பாக கொடுத்த KYP Forms update செய்யப்படவில்லை என்பதனையும் நாம் கோடிட்டு காட்டி இருக்கின்றோம்.
ஆனால் அவர்கள் இன்று வங்கி, அஞ்சல் பகுதியில் இருந்து migrate ஆன காரணத்தினால் பலருடைய தரவுகள் சரியில்லை என்றும், ஆகவே அவை சரி செய்யப்பட வேண்டும் என்பதற்காக KYP கேட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.
நாம் யார் நாம் யாருக்கு பிரச்சனை இருக்கிறதோ அவருக்கு மட்டும் கேட்கலாமே என்று சொன்னோம். ஆனால் அது சாத்தியமில்லை என்றதனால் அண்மையில் வங்கி தபால் பகுதியில் இருந்து migrate ஆனவர்கள் மட்டும் KYP விண்ணப்பங்கள் தரப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஆகவே மாவட்ட சங்கங்கள் இதை கணக்கில் எடுத்துக் கொண்டு அண்மையில் Migrate ஆனவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் இவர்களிடம் KYP விண்ணப்பங்கள்* வாங்கி CCA அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
11) பிறகு இன்கிமென்ட் குறைக்கப்பட்ட போன் மெக்கானிக்கினுடைய *LPD பிரச்சனையை* நிர்வாகத்தோடு விவாதித்து இருக்கின்றோம். இன்னும் DOTலிருந்து பதில் வரவில்லை என்று பதில். வலியுறுத்தி விரைவில் பதிலை விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்
12) தோழர்களே,
மேலும் நம்மிடம் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்த சுமார் 17 பிரச்சனைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கு கடிதம் மூலம் கொண்டு சென்றிருக்கிறோம். அவற்றை ஒரு வார காலத்திற்குள் பரிசலிப்பதாக நிர்வாகம் உறுதி அளித்துள்ளார்கள்.
13) 78.2% IDA அரியர்ஸ் பிரச்சினைகள்.
நாம் இந்த பிரச்சனையை 2019லேயே இன்கிரிமென்ட் இல்லாமல் arrears பெற்று தீர்த்து விட்டோம். ஆனால் அந்த பிரச்சனை இன்றும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு சங்கம் நீதிமன்றத்திற்கு சென்று சாதகமான தீர்ப்பை பெற்றாலும், நிர்வாகம் அதற்காக மேல்முறையீடு செய்திருக்கின்றார்கள். ஆகவே நிர்வாகம் தற்பொழுது அவர்களை வழக்கு தொடுத்தவர்களில் யாராவது விண்ணப்பித்தால் அவர்களுக்கு "undertaking" வாங்கிக் கொண்டு 78.2% IDA கொடுப்பதற்கான முடிவு செய்வதாக தெரிவித்து இருக்கிறார்கள். AIBDPA இந்த பிரச்சனையை முன் யோசனையோடு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய ஓய்வூதியர்களுக்கு சாதகமாக தீர்த்து வைத்திருக்கிறோம் என்பதையும் நாம் இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.
14) பிறகு பகுதி வாரியான அதாலத் வரும் மே 10 அன்று ஊட்டியில் நடைபெறும். அது கோயம்புத்தூர் BA க்கு மட்டும். கோயம்புத்தூர் குன்னூர் மாவட்டங்கள் இதில் அடங்கும். இதற்கான தகவல் விரைவில் வெளியிடப்படும். நமது கோயம்புத்தூர், குன்னூர் மாவட்டச் செயலாளர்கள் அந்தப் பகுதியில் நிலுவையில் உள்ள அத்தனை பிரச்சினைகளையும் எதையும் விட்டுவிடாமல் உடனடியாக அதாலத்தில் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
அறிவிப்பு வந்தவுடன் நாம் அதனை பதிவு செய்ய வேண்டும்.
15) பிரின்சிபில் CCA அவர்களிடம் அதாலத்தில் சங்கங்கள் பிரச்சனைகளை கொடுத்து விவாதிப்பதற்கான கடந்த கால ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.
அவர் முதலில் மறுப்பு தெரிவித்தாலும் பிறகு அதிகாரிகளுடன் சேர்த்து பேசி முடிவெடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
தோழர்களே !!
கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்திருக்கிறது.
சுமார் 75 நிமிடங்கள் நடைபெற்ற அந்த கூட்டம்* பல்வேறு பிரச்சனைகளை விவாதித்து இருக்கின்றோம்.
நம தோழர்களுடைய மனக் கொந்தளிப்பை அவர்கள் மத்தியில் கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் வெளிப்படுத்தி இருக்கிறோம்.
நிர்வாக தரப்பில் நமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள காலதாமதங்களை புரிந்து கொண்டு, அவர்கள் மத்தியில் *internal review* நடத்தி இருக்கிறார்கள். பிரச்சனைகளை தீர்ப்பது உறுதி அளித்துள்ளார்கள். நிர்வாகத்தோடு தொடர்ந்து பிரச்சினைகளை அணுகுவோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்ஆர் ராஜசேகர்
மாநில செயலாளர்
18.4.24
0 Comments