Latest

10/recent/ticker-posts

மே மாத பென்ஷன் பட்டுவாடா 31-05-2024

 மே மாத பென்ஷன் பட்டுவாடா  31-05-2024

தோழர்களே !!

             கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நம்முடைய மாதாந்திர பென்ஷன் காலதாமதமாகி வருவதை கண்டித்து மாநில சங்கம் மே 27ஆம் தேதி சேவிங் கிராம் (இ-மெயில் மூலமாக) அனுப்பும்  இயக்கத்தை நடத்தியது.

          நம்முடைய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் இந்த இயக்கத்தை முழுமையாக நடத்தினார்கள்.

             31 5 24 இன்று காலை 3 மணி முதல் வங்கிகளில் பென்ஷன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது*. 

            அஞ்சல் கணக்கு வைத்திருப்போருக்கு பல இடங்களில் பென்ஷன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் இன்னும் பட்டுவாடா ஆகவில்லை என்ற தகவலும் வந்துள்ளது. அதற்கு மாநில சங்கம் நடவடிக்கை எடுக்கும்.

 தோழர்களே,

 நம்முடைய இயக்கம் பலனை கண்டுள்ளது💐. 

                   நம்முடைய உணர்வுகளை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுத்த Pr.CCA நிர்வாகத்திற்கும், நம்முடைய போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய நம்முடைய மத்திய சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும்🙏.


 தோழமையுடன் 
ஆர். ராஜசேகர்,
மாநில செயலர்,
AIBDPA TN.

31.5.24

Post a Comment

0 Comments