Latest

10/recent/ticker-posts

பென்ஷன் காலதாமதமாவதை கண்டித்து AIBDPA தமிழ் மாநிலம் Pr.CCA-க்கு Savingram இயக்கம்.

 அக்டோபர் 23 முதல் மாதாந்திர பென்ஷன் காலதாமதமாவதை கண்டித்து Pr.CCA-வுக்கு Savingram அனுப்பும்  இயக்கம். 

தோழர்களே !!

       அக்டோபர் 2023 முதல் BSNL DOT ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் மாத கடைசி நாள் அன்று சரியாகப் பட்டுவாடா செய்யப்படுவதில்லை. மாலை நேரத்திற்கு பிறகு தான் வங்கி மற்றும் அஞ்சல் கணக்குகளில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. 

       ஆகவே பலர் அந்த தேதியில்  பென்ஷனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இது தொடர்பாக மாநில சங்கம் பலமுறை CCA நிர்வாகத்தோடு கடிதம் மூலமாகவும், பேச்சுவார்த்தை மூலமாகவும் பிரச்சினையை கொண்டு சென்றுள்ளது. எனினும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. 

மாநிலச் சங்கமும் 1-2-24 மற்றும் 30-4-24 அன்று Pr.CCA அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

அடுத்த கட்டமாக Savingram இயக்கம் நடத்துவதென மாநில மையம் தீர்மானித்துள்ளது. 

எனவே மாவட்டச் செயலாளர்கள்,  மாநில சங்க நிர்வாகிகள்,  சிறப்பு அழைப்பார்கள் அனைவரும் Pr.CCA  மற்றும் Jt.CCA -க்கும் மேற்கண்ட savingramஐ e-mail மூலமாக அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதன் நகல் மாநில செயலாளருக்கு அனுப்பப்பட வேண்டும். 

இந்த இயக்கத்தை இரண்டு நாட்களுக்குள்(27.5.24 மாலைக்குள்) தோழர்கள் நடத்தி முடிக்க வேண்டும். 

தோழமை வாழ்த்துக்களுடன், 
ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர்

24 5 24

தோழர்களின் கவனத்திற்காக 
இ-மெயில் ஐடியை மீண்டும் தெளிவாக பதிவு  செய்யவும்.

Principle cca
pccatn.ccatn@nic.in

Joint CCA
jtccapen.ccatn@nic.in

Circle Secretary 
rrajasekar7x@gmail.com 

யாரேனும் தோழர்கள் தவறாக அனுப்பி இருந்தால் தயவு செய்து மீண்டும் அனுப்பவும்

Post a Comment

0 Comments