CGM BSNL தமிழ்நாடு திரு.D. தமிழ்மணி அவர்களுடன் சந்திப்பு
தோழர்களே !!
இன்று 24 5 24 அன்று தமிழ்நாடு CGM திரு.D. தமிழ்மணி அவர்களை மாநில சங்கத்தின் சார்பில் சந்தித்தோம். சந்திப்பின் போது மாநில தலைவர் தோழர். சி.கே. நரசிம்மன், மாநிலச் செயலாளர் ஆர். ராஜசேகர், கோவை மாவட்ட தோழர். சீனிவாச ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
BSNL ஓய்வூதியர் அதாலத்தை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தியமைக்காக CGM அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் மெடிக்கல் பில் பிரச்சினைகளில் ஒரு சில இடங்களில் உள்ள பிரச்சனைகளை சுட்டி காட்டி இருக்கின்றோம். குறிப்பாக பில் சமர்ப்பிப்பதில் காலதாமதம் காரணமாக மெடிக்கல் பில்கள் நிராகரிக்கப்படுவதையும், சில மாவட்டங்களில் கண் சிகிச்சைக்காக தரப்படும் மெடிக்கல் பில்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி இருக்கின்றோம். அவரும் இப்பிரச்சனைகளை தீர்க்க ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.
மேலும் மாவட்ட அளவில் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் அதாலத் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
தோழர்களே,
இம்மாதம் 31 5 24 அன்று *CGM ஓய்வு பெறுவதால் அவருக்கு மாநிலச் சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
மேலும் நம்முடைய ஓய்வூதியர் சங்கத்தில் உறுப்பினராக இணைவதற்கு விண்ணப்பம் கொடுத்து வேண்டுகோள் வைத்துள்ளோம். அவரும் இசைவு தெரிவித்துள்ளார்.
தோழமை வாழ்த்துக்களுடன்*ஆர் ராஜசேகர்*
*மாநிலச் செயலாளர்*
24 5 24
0 Comments