ஓய்வூதியத் திருத்தம் - PB CAT தீர்ப்பின் தாக்கம் - com. K.G.Jeyaraj GS AIBDPA
September 26, 2023
ஓய்வூதியத் திருத்தம் - PB CAT தீர்ப்பின் தாக்கம் - AIBDPA பொதுச்செயலரின் அறிக்கை
தோழர்களே ! இந்த தீர்ப்பு BSNL- MTNL ஓய்வூதியம் பெறுவோர் மத்தியில் மிகுந்த நம்பிக்கையையும் அதே சமயம் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
நீதிமன்றத்தை அணுகிய அமைப்புகளும் தீர்ப்பின் தாக்கம் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவர்களின் எதிர்வினைகளிலிருந்து தெளிவாகிறது. CAT உத்தரவை செயல்படுத்துவது அரசு மற்றும் DoTல் உள்ள அதிகார வர்க்கத்தின் நிலைப்பாட்டை சார்ந்துள்ளது. அரசு உயர் நீதிமன்றங்களை அணுகும் (appeal செய்யும்) என்று மனுதாரர் அமைப்புகளே எதிர்பார்க்கின்றன.அதனால் தான், ஒருதலைப்பட்சமாக தடை விதிக்கப்படுவதைத் தவிர்க்க, அவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் தாக்கல் மனு செய்துள்ளனர்.
மேல்முறையீடு செய்தால், அரசு உச்ச நீதிமன்றம் மற்றும் SLP வரை செல்லலாம் என்பதால், நிறைய காலதாமதம் ஏற்படும். ஓய்வூதிய மாற்றம் தொடர்பான விசயம் நீதிமன்றத்தில் நிலுவையில் (subjudice) உள்ளதைக் காரணம் காட்டி இடையில் எந்தவொரு விவாதத்தை நடத்தவும், முடிவை எடுப்பதற்கும், DOT மறுக்கலாம்.
தீர்ப்பைப் பொறுத்தவரை, "மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுடன் கட்டாயமான சமத்துவம்" என்று உத்தரவு கூறுகிறது, இது மத்திய அரசு ஓய்வூதியர்களுடன் fitment (பொருத்துதல்) அல்லது ஓய்வூதியம் குறித்தோ எந்த விஷயத்திலும் மாறுபட்ட கருத்துகளை எடுத்துவைக்க முற்படலாம்.
2017க்கு பின்பு ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத்தில் முரண்பாடு (anomoly) பற்றிய கேள்வியும் உள்ளது. உண்மையில், அவர்களுக்கு 01-01-2017 முதல் புதிய ஊதிய விகிதங்களில் notional நிர்ணயம் செய்ய DoT இன் முன்மொழிவுப்படி (proposal) ஓய்வூதிய தேதியிலிருந்து பணப்பலன்களை வழங்குவதான நடைமுறையுடன் புதிய ஊதிய விகிதங்களில் வழங்கப்படும் அடுத்தடுத்த இன்கிரிமெண்டுகளும் அவர்களுக்குப் பயனளித்திருக்கும்.இதில் ஒரு மனுதாரர் சங்கம் 2017-ம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்குப் பாதகமாக இருக்கும் அதே ஃபிட்மென்ட்டை ஓய்வு பெறும்போதும் பெறுவோம் என்று முன்னர் கூறியது.
மேலும், மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விருப்ப முன்மொழிவு 3ன் (option 3)படி ஓய்வூதியப் பலன்களைப் பெற நாம் உரிமை பெற்றுள்ளோம். *புதிய ஊதிய விகிதங்கள் இல்லாத பட்சத்தில் இந்த (option 3) பலன் கிடைக்காமல் போகலாம்.
வேறு சில விஷயங்களிலும் ஓய்வூதியதாரர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தோழமையுடன் K.G.ஜெயராஜ் பொதுச்செயலர்
PENSION REVISION - IMPLICATION OF THE PB CAT JUDGMENT.
The judgment, no doubt, has created a lot of hope and also confusion amongst the BSNL MTNL pensioners. The organisations which approached the court are also very cautious about the impact of the judgment as is clear from their reactions.
The implementation of the CAT order depends upon the stand of the government and the bureaucracy in DoT. The petitioner organisations themselves expect that government will approach the higher courts. That is why they have filed caveat in the High Court of Delhi to avoid unilateral stay. In the event of appeal, there will be lot of delay, as the government may go up to the Supreme Court and SLP thereafter. In between, DOT may deny any discussion/ decision on pension revision, on the plea of subjudice.
Regarding the judgment, the order states “strict parity with central government pensioners", which could be interpreted either on fitment or in pension itself with the central government pensioners or in any other matter.
There is also the question of anomaly in pension for the post 2017 retirees. Actually, the proposal of the DoT to give them notional fixation in the new pay scales with effect from 01-01-2017 and subsequent increments also granted notionally on the new pay scales with financial effect from the date of retirement was beneficial to them. One of the petitioner associations haf stated earlier that they would get the same fitment on retirement which would be disadvantageous to the post 2017 retirees.
Furthermore, we are entitled to get the benefit of option 3 already granted to the Central government pensioners. In the absence of new pay scales we may be deprived of this benefit.
Doubts are being raised by pensioners on some other issues also.
0 Comments