கோரிக்கை நாள் -மகஜர் அளிக்கும் போராட்டம் 02.07.2024
BSNL- MTNL ஓய்வூதியர்களின் கூட்டு போராட்ட குழுவின் முதல் கட்ட போராட்டம்
தோழர்களே !!
01-01-2017 முதல் 3வது PRC அடிப்படையில் IDA சம்பள விகிதத்தில் 15% ஓய்வூதிய உயர்வு கேட்டு BSNL MTNL இலாகாவில் செயல்படும் எட்டு ஓய்வூதிய சங்கங்கள் ஒன்றாக இணைந்து உருவாக்கியுள்ள கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ள முதல் கட்ட போராட்டம்.
02-072024 அன்று GM அலுவலகங்களில் ஆர்ப்பாட்டமும் தொலைத்தொடர்பு இலாகா மந்திரி மற்றும் DOT செயலர் அவர்களுக்கு இலாக்கா மூலமாக கோரிக்கை மனு அளிக்கும் போராட்டமும் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுப் நடவடிக்கை குழு சங்கங்களோடு தொடர்பு கொண்டு உள்ளோம். விரைவில் இணைந்த சுற்றறிக்கை வெளியிடுவோம்.
நமது தோழர்கள் இந்த போராட்டத்திற்கு தயாரிப்பு வேலைகளை துவங்க வேண்டும். மகஜர் நகல் அனுப்பப்பட்டுள்ளது. அதையும் தயார் படுத்தி வைத்துக் கொள்ளவும். அனைத்து ஓய்வூதியர்கள் மத்தியிலும் இந்த போராட்டத்தினுடைய கோரிக்கைகளை விரிவாக கொண்டு செல்லவும்.
2-7-24 கோரிக்கை நாள் போராட்டத்தை எழுச்சியுடன் நடத்திடுவோம்👍
தோழமை வாழ்த்துக்களுடன் கஆர் ராஜசேகர்
மாநில செயலாளர்
25.6.24
0 Comments